LSG vs PBKS Playing 11 Predictions, Head to Head Records : லக்னோவின் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனின் 13ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று 5ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
LSG vs PBKS Playing 11 Predictions, LSG vs PBKS Head to Head Records
ஏகானா கிரிக்கெட் மைதானம் சுழற் பந்துக்கு சாதகமான பிட்ச் என்பதால், அதிக ரன்கள் குவிப்பது என்பது சற்று கடினமானதாக இருக்கும். இதற்கு முன்னதாக இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 3 போட்டியில் லக்னோ அணியும், ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக லக்னோ 257 ரன்கள் குவித்துள்ளது.
LSG vs PBKS Playing 11 Predictions, LSG vs PBKS Head to Head Records
கடந்த ஆண்டு இரு அணிகளும் இந்த மைதானத்தில் முதல் முறையாக மோதின. இதில், லக்னோ 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மாயங்க் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 14 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே 200 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த ஆண்டு கேகேஆர் அணி எடுத்தது.
LSG vs PBKS Playing 11 Predictions, LSG vs PBKS Head to Head Records
கடந்த ஐபிஎல் சீசனில் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய வீரராக ஷஷாங்க் சிங் கருதப்பட்டார். கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் டெத் ஓவரில் அதிக டாட் பந்துகள் வீசிய வீரராக அர்ஷ்தீப் கருதப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 38 சதவிகிதம் வரையில் டாட் பந்துகள் வீசியுள்ளார்.
LSG vs PBKS Playing 11 Predictions, LSG vs PBKS Head to Head Records
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அவர்கள் பஞ்சாப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க தயாராக உள்ளனர். லக்னோ அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக உள்ளது. ஷர்துல் தாக்கூர் பொறுப்புடன் விளையாட வேண்டும். கேப்டன் ரிஷப் பண்ட் மீது அணி அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
LSG vs PBKS Playing 11 Predictions, LSG vs PBKS Head to Head Records
மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 243 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, மற்றொரு பெரிய ஸ்கோரை பதிவு செய்து வெற்றி பெற காத்திருக்கிறது. ஆனால், இந்த போட்டி நடைபெறும் ஏகனா மைதானத்தின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்படுவார்கள். எனவே, இரு அணிகளும் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.
LSG vs PBKS Playing 11 Predictions, LSG vs PBKS Head to Head Records
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயரை மட்டுமே பேட்டிங்கில் அதிகம் நம்பியுள்ளது. ஓமர்சாய், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் ஆல்ரவுண்டராக சிறப்பாக விளையாட வேண்டும். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் யுஸ்வேந்திர சாஹல் எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
LSG vs PBKS Playing 11 Predictions, LSG vs PBKS Head to Head Records
சாத்தியமான வீரர்கள் பட்டியல்:
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:
எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான், திக்விஜய் ராத்தி.
பஞ்சாப் கிங்ஸ்:
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அஸ்மதுல்லா ஓமர்சாய், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யான்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், வைஷாக் விஜய் குமார் / ஹர்ப்ரீத் பிரார்