36 Mobile Phones Stolen During IPL Match – 8 People Arrested! ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான பிளே ஆஃப் அணிகளை கணிக்க முடியாதபடி ஒவ்வொரு அணியும் சிறப்பாக விளையாடி வருகின்றன. மேலும், ஒவ்வொரு அணியிலும் அனுபவ வீரர்களை விட இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது செல்போன் திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru
தற்போது வரையில் சிஎஸ்கே விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. இதே போன்று டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது.
KKR கதையை முடித்த அறிமுக வீரர் அஸ்வனி குமார்! மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி!
CSK VS RCB, IPL 2025
இந்த நிலையில் தான் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியின் போது 36 செல்போன்கள் திருடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். CSK vs RCB போட்டியை பார்க்க வந்தவர்களிடமிருந்து 36 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து 36 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.