தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றி பெறுமா மும்பை இந்தியன்ஸ் – 2 தோல்வி, 3 போட்டியில் வெற்றி கிடைக்குமா?

Mumbai Indians Main Focus to Avoid Mistakes in Tamil : மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் இன்னும் வெற்றி பெறவில்லை. விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், திங்களன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் நடக்கும் போட்டி மும்பை அணிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற என்ன தவறுகள் செய்யக்கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.

Mumbai Indians Main Focus to Avodi Mistakes in Tamil : மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. முதல் போட்டி சென்னை, இரண்டாவது போட்டி குஜராத்துடன் நடந்தது. இதனால் அனைவரின் பார்வையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியின் மீது உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

IPL 2025, Rohit Sharma

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான தொடக்கத்தை தரவில்லை. ரோகித் சர்மா, ரியான் ரிகெல்டன் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. எனவே தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.


Mumbai Indians vs Kolkata Knight Riders

முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய விக்னேஷ் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. ராபின் மின்ஸ், சத்யநாராயண ராஜு ஆகியோர் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பந்துவீச்சில் பவர் பிளேவில் நிறைய ரன்கள் கொடுத்தனர்.

தோனியால் 10 ஓவர் பேட்டிங் ஆட முடியாது! அப்படினா 'இது' மட்டும் எப்படி? ரசிகர்கள் கேள்வி!
 

MI vs KKR, IPL 2025

பலம் வாய்ந்த கேகேஆர் அணியை கட்டுப்படுத்த பவர் பிளேவில் திறமையான பந்துவீச்சு தேவை. கடந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை மிடில் ஆர்டர் பேட்டர்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வதில் தவறினர். எனவே மும்பை வெற்றி பெற இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.

Latest Videos

click me!