கருண் நாயர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர். இவரது பெற்றோர்களின் சொந்த ஊர் கேரள மாநிலம் செங்கனூர் ஆகும். கருண் நாயர் கடந்த 2016ம் ஆண்டே உலகம் முழுவதும் பிரபலமானவர். 2016ல் நவம்பர் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணியில் இடம் கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார். கடந்த ஆண்டு முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி அவரது வாழ்க்கையையே மாற்றியது எனலாம். சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஆறு இன்னிங்ஸ்களில் 177 ஸ்ட்ரைக் ரேட்டில் 255 ரன்கள் எடுத்தார் நாயர். விஜய் ஹசாரே டிராபியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அங்கு அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 542 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.