டி20 போட்டிகளில் விராட் கோலி 100 அரை சதங்கள்:
Virat Kohli 100 Half Century in T20 Cricket : ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். ஆர்ஆர் பந்துவீச்சை சிதறடித்து இந்த ஐபிஎல் சீசனில் இரண்டாவது அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதம் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில் கோலி இந்த சாதனையை படைத்தார். 174 ரன்கள் இலக்கை துரத்தும் போது 39 பந்துகளில் ஹசரங்கா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
விராட் கோலி, பில் சால்ட் அதிரடியால் 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 175/1 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் 58வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்தார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த வீரர்களில் வார்னருக்கு அடுத்தபடியாக கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
13,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்
ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 13,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் ஆனார். மேலும், கிறிஸ் கெயில், அலெக்ஸ் ஹேல்ஸ், சோயிப் மாலிக், கீரன் பொல்லார்ட் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை படைத்த 5வது வீரர் ஆனார். விராட் கோலி ஐபிஎல் போட்டியில் 258 போட்டிகளில் விளையாடி 132 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 8252 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 58 அரைசதங்கள், 8 சதங்கள் அடங்கும்.
விராட் கோலி
விராட் கோலி இந்திய அணி சார்பில் 125 டி20 போட்டிகளில் விளையாடி 4188 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம், 38 அரைசதங்கள் அடங்கும். கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு கோலி தனது டி20 கிரிக்கெட் சர்வதேச வாழ்க்கைக்கு விடை கொடுத்தார்.