CSK vs MI: இவரால் பட்டபாடு போதும்! இளம் வீரரை நீக்கிய தோனி! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20ம் தேதி விளையாட உள்ள நிலையில், பிளேயிங் லெவனில் இளம் வீரரை நீக்கி தோனி அதிரடி முடிவெடுத்துள்ளார்.
சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20ம் தேதி விளையாட உள்ள நிலையில், பிளேயிங் லெவனில் இளம் வீரரை நீக்கி தோனி அதிரடி முடிவெடுத்துள்ளார்.
IPL: CSK playing eleven against MI: ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்க்ள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பண்ட் 49 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். மதிஷா பதிரனா, ரவீந்திரா ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பின்பு விளையாடிய சிஎஸ்கே 19.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி 11 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் ஆட்டநாயகன் விருதும் வென்றார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கேவுக்கு நீண்ட நாளைக்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது.
சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று 5ல் தோல்வி அடைந்து 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 20ம் தேதி விளையாட உள்ளது. நேற்று சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், மும்பைக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணிக்கு பெரும் பின்னடைவு! முக்கிய பாஸ்ட் பவுலர் விலகல்!
ஆனால் இளம் வீரர் ராகுல் திரிபாதி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படுகிறார். கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் வீணடித்து வரும் ராகுல் திரிபாதி, ஒரு போட்டியில் கூட 20 ரன்களை தாண்டவில்லை. அதிரடியாக ஆட முடியாமல் தடுமாறுவது மட்டுமின்றி ரன்களை அடிக்கவே ராகுல் திரிபாதி தடுமாறுகிறார். இதனால் தோனி இவரை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக இடம்பெற்ற 17 வயதான ஆயுஷ் மத்ரே மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார். இவர் ராகுல் திரிபாதிக்கு பதிலாக அணியில் இடம்பெறுவார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரச்சின் ரவிந்திரா, ஷேக் ரஷித் ஒப்பனிங்கில் களமிறங்குகின்றனர். அடுத்ததாக விஜய் சங்கர் களமிறங்குகிறார். இவரை தொடர்ந்து இளம் வீரர் ஆயுஷ் மத்ரே, ஷிவம் துபே விளையாடுகின்றனர். பின்வரிசையில் ஜடேஜா, தோனி, ஓவர்டன் பேட்டிங் செய்ய உள்ளனர்.
பவுலிங்கை பொறுத்தவரை அன்ஷுல் காம்போஜ், பதிரனா, கலீல் அகமது பாஸ்ட் பவுலிங்கிலும், நூர் அகமது, ஜடேஜா, தேவைப்பட்டால் ரச்சின் ரவீந்திரா ஸ்பின் பவுலிங்கிலும் வலு சேர்க்க உள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பிளேயிங் லெவன்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷித், விஜய் சங்கர், ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, ஓவர்டன், அன்ஷுல் காம்போஜ், மதிஷா பதிரனா, கலீல் அகமது, நூர் அகமது. ஷிவம் துபே இம்பேக்ட் வீரராக களமிறங்குவார்.
முதல் போட்டியிலேயே தோனியின் மனதை கவர்ந்த அதிரடி வீரர்! யார் இந்த ஷேக் ரஷீத்?