ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியுடன் களம் காணும் ராஜஸ்தான் ராயல்ஸ்; ஷேன் வார்னேவுக்கு கெளரவம்!

Published : Jan 30, 2025, 10:27 AM IST

2025 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.

PREV
14
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியுடன் களம் காணும் ராஜஸ்தான் ராயல்ஸ்;  ஷேன் வார்னேவுக்கு கெளரவம்!
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியுடன் களம் காணும் ராஜஸ்தான் ராயல்ஸ்; ஷேன் வார்னேவுக்கு கெளரவம்!

இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் சிக்சர்கள் மழை, அடுத்தடுத்து விக்கெட் என பரபரப்பாக செல்வதால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடர்களை டிவியில் பார்த்து வருகின்றனர். ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 21ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இப்போதே எதிபார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்காக ஒவ்வொரு அணியும் இப்போதே தயாராகி வருகின்றன. இந்நிலையில், 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடருக்காக தங்கள் அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானின் பாரம்பரிய இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களில் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 

24
ராஜஸ்தான் ராயல்ஸ்

கிரிக்கெட் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், குமார் சங்கக்காரா ஆகியோர் ராஜஸ்தான் அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான புதிய வீடியோவை அந்த அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் புதிய ஜெர்சியில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஷேன் வார்ன், ராகுல் டிராவிட், ரவி அஸ்வின் மற்றும் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களை அந்த அணி கௌரவித்துள்ளது.

அதாவது ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன், ராகுல் டிராவிட், யுஸ்வேந்திர சாஹல், கிரேம் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்க்யா ரஹானே, ஜோஸ் பட்லர், ஷேன் வாட்சன், டிரென்ட் போல்ட், பிராட் ஹாட்ஜ் ஆகியோர் அணிந்த ஜெர்சியை காட்சிப்படுத்தி கவுரவம் அளித்துள்ளது. புதிய ஜெர்சியை ராஜஸ்தான் அணி தங்கள் வலைத்தளத்தில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதியில் மாற்றமா? 'இம்பாக்ட் பிளேயர்' விதி நீக்கமா? முக்கிய அப்டேட்!
 

34
ஐபிஎல் 2025

இதற்கிடையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அனி ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோரைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆகியோரை ராஜஸ்தான் அணி புதிதாக ஏலத்தில் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு சிறப்பாக செயல்படவில்லை. சாம்சனின் தலைமையில், ராஜஸ்தான் அணி 2022 சீசனில் இறுதிப் போட்டியை விளையாடி தோல்வி அடைந்தது. 2024ல் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்றது. ஆனாலும் 2008ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. 
 

44
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அனியை  வலுப்படுத்தும் விதமாக முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீண்டும் அந்த அணியில் இணைந்துள்ளார். மேலும் தலைமை பயிற்சியாலர் குமார் சங்கக்காரா மற்றும் விக்ரம் ரத்தோர் ஆகியோருடன் இணைந்து மீண்டும் ராஜஸ்தானை சாம்பியனாக்க டிராவிட் தயாராக உள்ளார். 

ஐபிஎல் 2025: 3 மேட்ச் வின்னிங் வீரர்கள் காயம்; கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு!

Read more Photos on
click me!

Recommended Stories