'பனிமூட்டத்தின் வேலையா இருக்குமோ?' ஹாரி ப்ரூக் அவுட்டானதும் நேரலையில் கலாய்த்த முன்னாள் வீரர்கள்!

First Published | Jan 26, 2025, 10:08 AM IST

2வது டி20 போட்டியில் ஹாரி ப்ரூக் அவுட்டானதும் அவரை சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர், ''இது பனிமூட்டத்தின் வேலையாக இருக்குமோ'' என்று கிண்டல் செய்தனர். இதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. 

India vs England T20 series

இந்தியா வெற்றி 

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கபப்ட்ட 20 ஓவரகளில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 30 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். 
 

Harry Brook

ஹாரி ப்ரூக் விக்கெட் 

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. ஆனால் இந்திய இளம் அதிரடி வீரர் திலக் வர்மா சிக்சர் மழை பொழிந்து பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. 55 பந்தில் 72 ரன்கள் அடித்த திலக் வர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

முதல் போட்டியை போலவே இரண்டாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய ஸ்பின்னர்களை கணிக்க முடியமால் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதுவும் இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் 13 ரன்னில் வருண் சக்கரவர்த்தியின் மேஜிக் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வருண் என்ன பந்து வீசுகிறார் என தெரியாமல் ஹாரி ப்ரூக் பேட்டை நீட்டிய நிலையில், பந்து பட்டில் படாமல் ஸ்டெம்பில் தாக்கியது.

2024ன் சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் அர்ஷ்தீப் சிங்; மாபெரும் சாதனை; ரசிகர்கள் குஷி!


Varun vs Brook

நேரலையில் கலாய்த்த முன்னாள் வீரர்கள் 

இதனால் செய்வதறியாது நின்ற ஹாரி ப்ரூக் சிரித்துக் கொண்டே வெளியேறினார். அப்போது நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய இருவரும் ஹாரி ப்ரூக்கை கலாய்த்து தள்ளினார்கள். அதாவது ''இப்போது உங்களுக்கு பனிமூட்டம் ஏதும் தேவையில்லை. மீண்டும் ஒருமுறை வருண் சக்கரவர்த்தியின் பந்து ஸ்டெம்பை அடித்துள்ளது'' என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

அப்போது பேசிய சுனில் கவாஸ்கர், ''கொல்கத்தாவில் பனிமூட்டம் இருந்தது. இங்கே பனிமூட்டம் ஏதும் இல்லை. வருண் சக்ரவர்த்தி, அங்கே பனிமூட்டம் இருக்கிறதா? பந்து எங்கே போகிறது என்று ஹாரி ப்ரூக்குக்கு தெரியவில்லை'' என்று கூறினார். சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி இருவரும் ஹாரி ப்ரூக்கை கலாயத்து தள்ளியதற்கு காரணம் இருக்கிறது. 

India vs England 2nd T20

இதுதான் காரணம்

ஏனெனில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியிலும் வருண் சக்கரவர்த்தியின் பந்தில் தான் ஹாரி ப்ரூக் போல்டானார். அந்த போட்டிக்கு பிறகு பேசிய ஹாரி ப்ரூக், ''கொல்கத்தாவில் பனிமூட்டம் இருந்தது. அதனால் தான் இந்திய ஸ்பின்னர்களின் பந்தில் அவுட் ஆனோம். இனி வரும் போட்டிகளில் இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக் எதிர்கொள்வோம்'' என்று கூறியிருந்தார். 

ஆனால் சென்னையில் 2வது டி20 போட்டியில் பனிமூட்டம் ஏதும் இல்லாத நிலையில், வருண் சக்கரத்தியின் மாயாஜால பந்தை கணிக்க முடியாமல் ஹாரி ப்ரூக் அவுட்டானார். இதை மனதில் வைத்தே முன்னாள் வீரர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

தனி ஆளாக மாஸ் காட்டிய திலக் வர்மா; சிக்சர் மழை; 2வது டி20 போட்டியில் இந்தியா 'த்ரில்' வெற்றி!
 

Latest Videos

click me!