'நான் தளபதி ரசிகன் இல்லடா அதுக்கும் மேல'; விஜய் உருவத்தை டாட்டூ குத்திய வருண் சக்கரவர்த்தி!

First Published | Jan 25, 2025, 2:02 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய் உருவத்தை தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார். அவர் முன்பே டாட்டூ குத்தி இருந்தாலும், இப்போது இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

Varun Chakravarthy and Vijay

வருண் சக்கரவர்த்தி

இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். 

தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தியின் மாயஜால பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அதிரடி வீரர்கள் ஹாரி ப்ரூக், லியோம் விலிங்ஸ்டன், ஜோஸ் பட்லர் அவுட் ஆனார்கள். வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சுக்கு ஜோஸ் பட்லர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ள நிலையில், வருண் சக்கரவர்த்தி இப்போது மற்றொரு செயலுக்காக இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறார்.

Varun Chakravarthy-Vijay

விஜய்யின் உருவத்தை டாட்டூ குத்தியுள்ளார் 

அதாவது வருண் சக்கரவர்த்தி தனது உடலில் தவெக தலைவரும், நடிகருமான தளபதி விஜய்யின் உருவத்தை டாட்டூ குத்தியுள்ளது வைரலாக பரவி வருகிறது. விஜய்யின் 'தலைவா' படத்தின் ஸ்டில்லை தனது உடலில் பச்சைக் குத்தியுள்ளார். ஸ்பின் பந்தில் கலக்கி வரும் வருண் சக்கரவர்த்தி, நடிகர் விஜயிய்ன் தீவிர ரசிகர் ஆவார். விஜய்யை ரோல் மாடலாக கருதும் அவர் ஒவ்வொரு பேட்டியிலும் விஜய் குறித்து பேச தவறுவதில்லை.

அபிஷேக் ச‌ர்மா 2வது டி20யில் விளையாடுவதில் சிக்கல்; ரசிகர்கள் ஷாக்; என்ன காரணம்?


India vs England T20

விஜய்யின் தீவிர ரசிகர் 

பேட்டிகளின்போது விஜய் படங்கள் குறித்தும், விஜய் பன்ச் டயலாக் குறித்தும் பேசுவதை வருண் சக்கரவர்த்தி வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு தனது ஆதர்ச நாயகன் விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு வருண் சக்கரவர்த்திக்கு கிடைத்தது. விஜய்யுடன் தான் சந்தித்த புகைபடங்களை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அண்மையில் இங்கிலாந்து டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பு கூட ஒரு பேட்டியில் விஜய்யின் பன்ச் டயலாக்கை வருண் சக்கரவர்த்தி பேசி இருந்தார்.
 

Varun Chakravarthy Bowling

இந்திய அணியின் துருப்புச்சீட்டு

இப்போது இங்கிலாந்து தொடரிலும் வருண் சக்கரவர்த்தி அசத்தி வரும் நிலையில், அவர் பயிற்சி மேற்கொண்டபோது கையில் விஜய்யின் உருவத்தை பச்சைக்குத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.  வருண் சக்கரவர்த்தி கடந்த 2021ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.

14 டி20 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் வேட்டை நடத்தி இந்திய அணி தொடரை வெலல் முக்கிய பங்கு வகித்தார். இதேபோல் 70 ஐபிஎல் போட்டிகளில் 83 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல வருண் சக்கரவர்த்தியின் பவுலிங் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs ENG T20: 2வது டி20 போட்டியில் இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்; முகமது ஷமி கம்பேக்?

Latest Videos

click me!