இந்தியா வெற்றி
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 132 ரன்கள் இலக்கை இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 13 ஓவர்களில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 23 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா முக்கிய பங்காற்றினார். அதாவது இங்கிலாந்து பவுலர்களை ஓடவிட்ட அபிஷேக் சர்மா, . 20 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.