IND vs ENG 4th T20 : ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் இல்லை; ஆனாலும் இந்தியாவை வெற்றி பெற வைத்தது எப்படி?

Published : Feb 01, 2025, 10:02 AM IST

இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பிளேயிங் லெவனில் இல்லாத ஹர்ஷித் ராணா, திடீரென ஆட்டத்தில் களமிறங்கி வெற்றி பெற வைத்தார். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். 

PREV
16
IND vs ENG 4th T20 : ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் இல்லை; ஆனாலும் இந்தியாவை வெற்றி பெற வைத்தது எப்படி?
ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் இல்லை; ஆனாலும் இந்தியாவை வெற்றி பெற வைத்தது எப்படி?

இந்தியா இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்தை வீழ்த்தி, தொடரை வென்றது. 

இந்த போட்டியில் முதலில் பிளேயிங் லெவனில் இல்லாத இந்திய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா எதிர்பாராத விதமாக அறிமுகமாகி, அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

26
ஹர்ஷித் ராணா

நான்காவது டி20 போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியில் இந்தியா வெற்றி பெற்றது. ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

பந்துவீச்சில் அறிமுகமான ஹர்ஷித் ராணா இந்திய அணியில் வித்தியாசமாக நுழைந்தார். அவர் முதலில் பிளேயிங் லெவனில் இல்லை. ஆனால் ஷிவம் துபேவுக்கு பதிலாக அணிக்குள் வந்தார். மைதானத்திற்குள் வந்ததும் பந்தை கையில் எடுத்த ஹர்ஷித் தனது மாயாஜாலத்தை காட்டினார். முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் மூலம் ஹர்சித் ராணா ஓடிஐயில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதிர வைத்த Eng ஓபனிங்: திருப்பத்தை ஏற்படுத்திய ஹர்ஷித் ராணா, பிஷ்னாய் : இந்தியா த்ரில் வெற்றி!

36
ஷிவம் துபே ஏன் வெளியேறினார்?

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 100 ரன்களுக்குள் இந்திய அணி முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்தது. அதன் பிறகு ஹர்திக் பாண்டியா (53 ரன்கள்), ஷிவம் துபே (53 ரன்கள்) ஆகியோர் அரை சதம் அடித்தனர். 

இன்னிங்ஸின் கடைசி நேரத்தில், ஷிவம் துபேவுக்கு பவுன்சர் பந்து ஹெல்மெட்டில் பட்டது. ஜேமி ஓவர்டன் வீசிய பவுன்சர் அவரது ஹெல்மெட்டில் தாக்கியதால் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டு இந்திய அணி பீல்டிங் செய்யும் போது மைதானத்திற்கு வெளியே அமர வேண்டியதாயிற்று. ஷிவம் துபே இல்லாததால் ஹர்ஷித் ராணாவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. அவருக்கு பதிலாக அணிக்குள் வந்தார். 

46
முதல் ஓவரிலேயே ஹர்ஷித் அசத்தல்

12வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் பந்தை ஹர்ஷித் ராணாவிடம் கொடுத்தார். ராணா அற்புதமாக தொடங்கி லியாம் லிவிங்ஸ்டனை வீழ்த்தினார். டி20யில் அறிமுகமான இரண்டாவது பந்திலேயே ஹர்ஷித் ராணா லிவிங்ஸ்டனை வெளியேற்றினார். இரண்டாவது ஓவரில் 18 ரன்கள் கொடுத்தார். ஆனாலும் மூன்றாவது ஓவரில் ஜேக்கப் பெய்தலை வீழ்த்தி மேலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

56
வருண் சக்கரவர்த்தி திருப்புமுனை

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் போட்டியின் போக்கையே மாற்றினார். நட்சத்திர பேட்ஸ்மேன் ஹாரி புரூக் அதிரடியாக அரை சதம் அடித்தார். அவர் 25 பந்துகளில் அரை சதம் அடித்ததால் போட்டி இங்கிலாந்து பக்கம் செல்ல இருந்தது. ஆனால் வருண் சக்கரவர்த்தி அவரது விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமின்றி, ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றினார்.
 

66
ஸ்கோர் முழு விவரம்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 29, ரிங்கு சிங் 30, சிவம் துபே 53, ஹர்திக் பாண்டியா 53 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷித் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

182 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பில் சால்ட் 23, பென் டக்கெட் 39, ஹாரி புரூக் 51 ரன்கள் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 3, ஹர்ஷித் ராணா 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் கடைசி போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. 

'விசில் போடு'; புதிய ஜெர்சியுடன் கெத்தாக களமிறங்கும் சிஎஸ்கே; என்னென்ன மாற்றங்கள்?

click me!

Recommended Stories