Published : Jan 31, 2025, 05:26 PM ISTUpdated : Jan 31, 2025, 05:27 PM IST
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 20205 தொடர் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட்டின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் 20205: சொத்து மதிப்பில் 'கிங்'; ருத்ராஜ் கெய்க்வாட் இத்தனை கோடிக்கு அதிபதியா?
ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 21ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரை இப்போதே ஆவலுடன் எதிர்பாக்கத் தொடங்கி விட்டனர். இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என ஒவ்வொரு அணிகளும் என ஆயத்த பணிகளை தொடங்கி விட்டன. சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் ஏராளமான சாதனைகளை படைத்து முதலிடத்தில் உள்ளது.
5 ஐபிஎல் கோப்பைகளை தட்டித் தூக்கியுள்ள சிஎஸ்கே இந்த முறையும் கோப்பையை அடிக்க ஆயத்தமாக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு பல காலம் மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கிய நிலையில், இப்போது இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் சிஎஸ்கேவுக்கு கேப்டனாக உள்ளார்.
24
ருத்ராஜ் கெய்க்வாட்
அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் ருத்ராஜ் கெய்க்வாட், கடந்த சீசனில் மட்டும் 14 போட்டிகளில் 583 ரன்கள் குவித்துள்ளார். சேப்பாக்கத்தில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 706 ரன்கள் எடுத்துள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் சிஎஸ்கே கோப்பையை வென்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ருதுராஜ் கெய்க்வாட்டின் நிகர மதிப்பு 36 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு சிஎஸ்கேவுக்காக ரூ.20 லட்சம் விலைக்கு வாங்கப்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட், இப்போது சென்னை சூப்பர் கிங்ஸிடமிருந்து ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
ஐபிஎல் வருமானம் மட்டுமின்றி, பிசிசிஐயுடனான உள்நாட்டு கிரிக்கெட் ஒப்பந்தம் மூலம் மாதத்திற்கு 50-60 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். இது தவிர கேம்ஸ்24எக்ஸ்7, கோக்ராடோஸ் மற்றும் எஸ்எஸ் கிரிக்கெட் கிட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்தும் ருத்ராஜ் கெய்க்வாட் வருமானம் ஈட்டுகிறார்.
மேலும் இவர் புத்திசாலித்தனமாக பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் இரண்டிலும் முதலீடு செய்துள்ளார். புனேவில் இவருக்கு ரூ.8 கோடி மதிப்பிலான ஒரு வீடு உள்ளது. ஐபில் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும், இந்திய அணியில் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு தொடர்ந்து இடம் மறுக்கப்படுகிறது. இவர் 23 டி20 போட்டிகளில் விளையாடி 633 ரன்களும், 6 ஓடிஐ போட்டிகளில் 115 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.