இந்தியாவுக்காக சாம்பியன்ஸ் டிராபி பாரம்பரிய நிகழ்வை ரத்து செய்த ஐசிசி; புலம்பும் பாகிஸ்தான்!

Published : Jan 31, 2025, 10:43 AM IST

'மினி உலகக்கோப்பை' என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக சாம்பியன்ஸ் டிராபி பாரம்பரிய நிகழ்வை ஐசிசி ரத்து செய்துள்ளது . இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

PREV
14
இந்தியாவுக்காக சாம்பியன்ஸ் டிராபி பாரம்பரிய நிகழ்வை ரத்து செய்த ஐசிசி; புலம்பும் பாகிஸ்தான்!
இந்தியாவுக்காக சாம்பியன்ஸ் டிராபி பாரம்பரிய நிகழ்வை ரத்து செய்த ஐசிசி; புலம்பும் பாகிஸ்தான்!

'மினி உலகக்கோப்பை' என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் முதலில் பாகிஸ்தானில் தான் நடைபெற இருந்தன. ஆனால் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்தது. 

இதனால் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. ஒவ்வொரு முறையும் ஐசிசி நடத்தும் பெரிய தொடர்களின்போது கேப்டன்களின் சந்திப்பு மற்றும் போட்டோஷூட் நடைபெறுவது வழக்கம். சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பாகிஸ்தான் நடத்துவதால் அந்த நாட்டில் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்களின் சந்திப்பு மற்றும் போட்டோஷூட் நடைபெற இருந்தது.

24
சாம்பியன்ஸ் டிராபி 2025

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கேப்டன்களின் சந்திப்புக்காக ரோகித் சர்மாவை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று ஐசிசியிடம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ''இந்தியா செய்வது சரியல்ல; கிரிக்கெட்டில் அரசியலை கலக்கக்கூடாது. இதன்மூலம் ஐசிசியின் விதிமுறையை பிசிசிஐ மீறுகிறது'' என்று குற்றம்சாட்டியது.

மேலும் இந்த விவகாரத்தை ஐசிசியிடமும் எடுத்துச் சென்றது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ கேப்டன்கள் சந்திப்பு மற்றும் போட்டோஷூட் இருக்காது எனவும் இவை ரத்து செய்யப்படுவதாகவும் ஐசிசி இப்போது அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த கேப்டன்களின் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆகாஷ் தீப்புக்கு மீண்டும் டெஸ்ட் வாய்ப்பு கிடைக்குமா? அஸ்வின் சந்தேகம்

34
இந்திய கிரிக்கெட் அணி

காலம்காலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக கேப்டன்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், இந்த முறை இந்த நிகழ்ச்சியையே ஐசிசி ரத்து செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐக்கு சாதகமாக ஐசிசி இப்படி விதிமுறையை மாற்றுவது சரியில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் வீரர்களும், அந்நாட்டு ரசிகர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1996ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசியின் பெரிய தொடரை (சாம்பியன்ஸ் டிராபி) நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது. இந்த தொடரின் மூலம் பெரும் வருமானம் ஈட்டி விடலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கணக்கு போட்டிருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என பாகிஸ்தானின் கனவில் பிசிசிஐ மண்ணை அள்ளிப் போட்டது. இப்போது கேப்டன்களின் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் புலம்பித் தவித்து வருகிறது.

44
பிசிசிஐ-ஐசிசி

முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் அனைத்து நாடுகளின் ஜெர்சியில் இடம்பெறுவது வழக்கமான நடைமுறை என்றபோதிலும், பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் பரவின. 

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பிசிசிஐ, ஐசிசி விதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். சாம்பியன்ஸ் டிராபியில் மற்ற அணிகள் பின்பற்றும் விதிகளை நாங்களும் பின்பற்றுவோம் என விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

IND vs ENG 4th T20: புது சாதனை படைக்கும் SKY; சாதகமான புனே பிட்ச்; இந்தியாவுக்கு கப்பு கன்பார்ம்!

click me!

Recommended Stories