IND vs ENG 4th T20: புது சாதனை படைக்கும் SKY; சாதகமான புனே பிட்ச்; இந்தியாவுக்கு கப்பு கன்பார்ம்!

Published : Jan 31, 2025, 08:58 AM IST

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டி20 இன்று நடைபெற உள்ள நிலையில், போட்டி நடக்கும் புனே பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பல்வேறு இந்திய வீரர்கள் பல சாதனைகள் படைக்க காத்திருக்கின்றனர்.

PREV
14
IND vs ENG 4th T20: புது சாதனை படைக்கும் SKY; சாதகமான புனே பிட்ச்; இந்தியாவுக்கு கப்பு கன்பார்ம்!
IND vs ENG 4th T20: புது சாதனை படைக்கும் SKY; சாதகமான புனே பிட்ச்; இந்தியாவுக்கு கப்பு கன்பார்ம்!

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 3வது போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் இன்று (31ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை பவுலிங்கில் அசத்தி வருகிறது. வருண் சக்கரவர்த்தி 3 போட்டிகளில் 10 விக்கெட் வீழ்த்தி சூப்பர் பார்மில் இருக்கிறார். ஆனால் ரவிபிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீசவில்லை. ஆனால் பேட்டிங்கில் இந்தியா படுமோசமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நன்றாக விளையாடிய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அடுத்த இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறியுள்ளனர்.

24
இந்தியா-இங்கிலாந்து டி20

மிக முக்கியமாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த தொடர் முழுவதுமே ரன்கள் அடிக்கத் தடுமாறி வருகிறார். அவர் எளிதில் விக்கெட்டுகளை தாரைவார்ப்பது இந்தியாவுக்கு சிக்கலாக உள்ளது. இதேபோல் ஹர்திக் பாண்ட்யா, துணை கேப்டன் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பேட்டிங்கில் செயல்படவில்லை.

கருப்பு மண் சாயல் கொண் புனே பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக விளங்குகிறது. பந்து நன்றாக நின்று சுழல்வதால் ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கும்ட இந்த பிட்ச்சில் ஆரம்பத்தில் நன்றாக அடித்து ஆடினாலும், போகப் போக ரன்கள் எடுப்பது சிரமமாக இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்தில் தவறிழைத்த ஆர்சிபி; 3 போட்டியில் 9 ரன் கூட தாண்டாத அதிரடி வீரர்; 11 கோடி போச்சா!
 

34
இந்தியா-இங்கிலாந்து 4வது டி20

இந்த 4வது டி20 போட்டியில் விளையாடும் வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைக்க காத்திருக்கின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், டி20 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைக்க இன்னும் 3 விக்கெட்டுகளே தேவை. அதிரடி வீரர் அபிஷேக் சர்மா, டி20 போட்டிகளில் 3500 ரன்களை எட்ட இன்னும் 69 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டும்.

SKYஎன அழைக்கப்படும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்களை எட்ட இன்னும் 4 சிக்சர்களே அடிக்க வேண்டியதுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எட்ட, இன்னும் இரண்டு விக்கெட்டுகளைமட்டுமே எடுக்க வேண்டும். இங்கிலாந்து கேப்டனும் விக்கெட் கீப்பருமான அர்ஷ்தீப் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் 11,500 ரன்களை எட்ட இன்னும் 45 ரன்கள் மட்டுமே எடுத்தால் போதும்.
 

44
இந்திய அணி பிளேயிங் லெவன்

4வது டி20 போட்டியில் இந்திய அணியில் கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் அல்லது துருவ் ஜூரல் நீக்கப்பட்டு இவர்களுக்கு பதிலாக ஷிவம் துபே அல்லது ரிங்கு சிங் விளையாட வாய்ப்பு உள்ளது. மேலும் மேலும் அர்ஷ்தீப் சிங் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என்றும் அக்சர் படேலுக்கு பதிலாக ராமன்தீப் சிங் இடம்பெறவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

4வது டி20‍ போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ராமன்தீப் சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

ஆகாஷ் தீப்புக்கு மீண்டும் டெஸ்ட் வாய்ப்பு கிடைக்குமா? அஸ்வின் சந்தேகம்

click me!

Recommended Stories