Norway Chess: Gukesh beats Carlsen - climbs up the rankings
உலகப்புகழ் பெற்ற நார்வே செஸ் தொடர் நார்வேயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகள் மோதுகின்றனர். உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், தமிழ்நாட்டை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
24
கார்ல்சனை வெற்றி கொண்ட குகேஷ்
பெண்கள் பிரிவில் ஆர் வைஷாலி, கோனேரு ஹம்பி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில், உலக சாம்பியனான தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ், செஸ் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இது நார்வே கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து குகேஷ் பெற்ற முதல் கிளாசிக்கல் வெற்றியாகும். தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்குப் பிறகு செஸ் போட்டியின் வரலாற்றில் கார்ல்சனை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் 19 வயதான குகேஷ் பெற்றார்.
34
நிதானத்தை கைவிடாத குகேஷ்
வெள்ளை காய்களுடன் விளையாடிய குகேஷ், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கார்ல்சன் முன்னிலையில் இருந்தபோதும் நிதானத்தை கைவிடாமல் பொறுமையாக விளையாடினார். இருவருக்கும் இடையே நீயா? நானா? போட்டி நிலவிய நிலையில், கடைசி கட்டத்தில் கார்ல்சன் காய் நகர்த்துதலில் தவறிழைத்தால் குகேஷ் அதை தனக்கு சாதகமாகக் பயன்படுத்திக் கொண்டு 3-0 என்ற கணக்கில் வெற்றியை அறுவடை செய்தார்.
குகேஷ் எத்தனை புள்ளிகள் பெற்றுள்ளார்
இந்த வெற்றியின் மூலம், டி.குகேஷ் நார்வே செஸ் 2025 புள்ளிகள் பட்டியலில் 8.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். கார்ல்சன் மற்றும் அமெரிக்கன் ஃபேபியானோ கருவானாவை விட ஒரு புள்ளி மட்டுமே அவர் பின்தங்கியுள்ளார். நார்வே செஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 9.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
குகேஷ்க்கு எதிரான போட்டியில் பல்வேறு நேரங்களில் மேக்னஸ் கார்ல்சனின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நிதானத்தை இழந்த அவர் தவறான காய் நகர்த்துதலை மேற்கொண்டு குகேஷ்க்கு வெற்றியை தாரை வார்த்தார்.
தான் தோல்வி அடைந்ததை தாங்க முடியாத கார்ல்சன் கோபத்தில் செஸ் டேபிளை ஓங்கி குத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கார்ல்சனின் இந்த செயல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.