David Warner Predicts RCB Will Win IPL 2025 Final : 2025 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பது குறித்து கணித்துள்ளார்.
18வது ஐபிஎல் தொடரில் ரஜத் பாடிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் கனவுடன் உள்ளது.
26
ஐபிஎல் 2025 தகுதி சுற்று போட்டி 2
நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
36
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி
இந்தப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
46
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2016 இல் ஆர்சிபி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் ஆர்சிபி-யின் முதல் கோப்பை வெல்லும் கனவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகர்த்தது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக இருந்தவர் டேவிட் வார்னர். இப்போது வார்னர், இந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியன் யார்? இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் யார் என்பது குறித்து கணித்துள்ளார்.
56
ஆர்சிபி டிராபி வெல்லும், ஹேசல்வுட் ஆட்டநாயகன் விருது
சமூக ஊடகங்களில் ஒருவர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரிடம் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வார்னர், இந்த ஆண்டு ஆர்சிபி வெல்லும் என்றும், ஜோஷ் ஹேசல்வுட் ஆட்ட நாயகன் விருதை வெல்லக்கூடும் என்றும் பதிலளித்துள்ளார்.
66
ஜோஷ் ஹேசல்வுட்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஹேசல்வுட் 11 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.