சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?

Published : Feb 14, 2025, 03:24 PM IST

எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் நடத்தப்படுகிறது. கடைசியாக 2017ல் நடந்தது. 1998ல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. 2009 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது. 

PREV
14
 சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?
சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?

மினி உலகக்கோப்பை என்று அழைக்கபடும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி முதல் நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் பரிசுத் தொகையை 53% அதிகரித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வெல்லும் அணி 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20 கோடி) பரிசை அள்ளும். 

இரண்டாம் இடம் பிடிக்கும் அணி 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 9.72 கோடி) பெறும். அரையிறுதியில் தோற்கும் அணிகள் தலா 560,000 அமெரிக்க டாலர்களை (ரூ. 4.86 கோடி) பெறுவார்கள். சாம்பியன்ஸ் டிராபியின் மொத்த பரிசுத் தொகை இப்போது 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ. 60 கோடி) உயர்ந்துள்ளது.

24
சாம்பியன்ஸ் டிராபி 2025

சாம்பின்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 34,000 டாலர்கள் (ரூ.30 லட்சம்) கிடைக்கும். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் தலா 3,50,000 டாலர்களை (சுமார் ரூ.3 கோடி) பெறும். 

ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் 1,40,000 டாலர்களை (சுமார் ரூ.1.2 கோடி) பெறுவார்கள். பங்கேற்கும் எட்டு அணிகளுக்கும் போட்டியில் பங்கேற்றதற்காக குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1.08 கோடி) கிடைக்கும். 

"கணிசமான பரிசுத் தொகை விளையாட்டில் முதலீடு செய்வதற்கும் எங்கள் நிகழ்வுகளின் உலகளாவிய கௌரவத்தைப் பேணுவதற்கும் ஐசிசியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது," என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் யார் மோதல்? இந்தியா‍-பாக். மேட்ச் எப்போது?

 

 

34
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி

1996க்குப் பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக ஐசிசி போட்டியை நடத்துகிறது. இருப்பினும் பாதுகாப்புக் காரணங்களால், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும். இந்திய அணி தனது முதல் போட்டியை பிப்ரவரி 20 அன்று வங்காளதேசத்திற்கு எதிராக விளையாட உள்ளது. 

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.இரண்டு பிரிக்கப்பட்ட எட்டு அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

44
சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகை

ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2009 முதல் 2017 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது, பின்னர் கொரொனா தொற்று இடையூறுகள் மற்றும் பல்வேறு காரணங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நடக்கிறது. 

சாம்பியன்ஸ் டிராபி 1998ல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2027ம் ஆண்டு டி20 பார்மட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் மனைவிகளுடன் செல்ல தடை? பிசிசிஐ அதிரடி!

click me!

Recommended Stories