பேட்டிங், பீல்டிங்கில் என அனைத்திலும் சிஎஸ்கே படுமோசமாக இருக்கிறது. இதற்கிடையே சிஎஸ்கே அணி மேலும் பலவீனமடையும் வகையில் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறினார். தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது வீரர் ஆயுஷ் மத்ரே சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ருத்ராஜ்க்கு பதிலாக பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்படுவார் என தகவல்கள் பரவி வந்த நிலையில், ஆயுஷ் மத்ரே சேர்க்கப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த ஆயுஷ் மத்ரே அதிரடி வீரர் ஆவார். ரூ.30 லட்சம் அடிப்படை விலையுடன் இருந்த மத்ரே, ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் போது விற்கப்படாமல் இருந்தார். ஆனால் கெய்க்வாட்டின் காயத்தால் இப்போது அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே இன்று விளையாட உள்ள நிலையில், ஆயுஷ் மத்ரே இந்த போட்டியில் இடம்பெற வாய்ப்பில்லை.
தொடர் புறக்கணிப்பு! அவமானம்! 1077 நாட்களுக்கு பிறகு தன்னை நிரூபித்த கருண் நாயர்! யார் இவர்?