
Champions Trophy : சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதி போட்டிகளை நடத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அலைச்சலை சந்தித்துள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகின்றன. இந்திய அணி பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்ல மறுத்த விட்ட நிலையில், இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடைபெற்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
குருப் ஏ பிரிவை பொறுத்தவரை இந்தியாவும், நியூசிலாந்தும் ஏற்கெனவே அரையுறுதிக்கு தகுதி பெற்றன. குருப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றன. இதேபோன்று நியூசிலாந்தும், இந்தியாவும் மோதும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் முதலிடம் செல்லும். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதி போட்டிகளை நடத்துவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது இந்தியா, நியூசிலாந்து போட்டி (India vs New zealand) முடிவடைந்தபின்பு தான் இந்தியா அரையிறுதியில் ஆஸதிரேலியாவுடன் மோதுமா? அல்லது தென்னாப்பிரிக்காவுடன் மோதுமா? என்பது தெரியவரும். அதாவது இந்தியா வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தால், குரூப் Bயில் 2வது இடத்தை பிடிக்கும் அணியுடன் அரையிறுதியில் மோதும். அரையிறுதி போட்டிகளை பொறுத்தவரை ஒரு போட்டி பாகிஸ்தானிலும், ஒரு போட்டி துபாயிலும் நடைபெற உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து: துபாய் பிட்ச் ரிப்போர்ட்! முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமா?
இந்தியா, நியூசிலாந்து போட்டி முடியடையாதவரை அரையுறுதி (semi Final) போட்டிகள் நடக்கும் இடத்தை இறுதி செய்ய முடியாது என்பதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரையிறுதி போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இடையில் திங்கட்கிழமை ஒருநாள் மட்டுமே பாக்கி உள்ளதால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளும் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளன.
இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும். இதனால் தென்னாப்பிரிக்கா துபாயில் (Dubai) இருந்து திரும்பி பாகிஸ்தானுக்கு வந்து நியூசிலாந்துடன் அரையிறுதியில் மோதும் . ஒருவேளை இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும். இதனால் ஆஸ்திரேலியா துபாயில் இருந்து திரும்பி பாகிஸ்தானுக்கு வந்து நியூசிலாந்துடன் அரையிறுதியில் மோதும்.
ஒட்டுமொத்தத்தில் அரையிறுதிக்கு ஒருநாளே உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா அணிகளில் ஒரு அணி அலைச்சலை சந்திப்பது உறுதியாகி உள்ளது. இந்த குழப்பத்துக்கு காரணமான ஐசிசிக்கு (ICC) இரு நாட்டு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஒன்று லீக் போட்டி முடிந்த இறகு அரையிறுதி போட்டிகளுக்கு கூடுதல் நாள் இடைவெளி ஏற்படுத்தி இருக்க வேண்டும் இல்லை யார் அரையிறுதுக்கு சென்றாலும் இந்த அணிகளோடு தான் மோத போகிறது என்பதை முன்கூட்டியே அட்டவணை தயார் செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் நுழைந்தது தென்னாப்பிரிக்கா! இந்தியா யாருடன் மோதுகிறது?