இந்தியா vs நியூசிலாந்து: இந்திய அணியில் 4 மாற்றங்கள்! களமிறங்கும் சிக்சர் மன்னன்!

Published : Mar 01, 2025, 03:50 PM IST

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்,

PREV
14
இந்தியா vs நியூசிலாந்து: இந்திய அணியில் 4 மாற்றங்கள்! களமிறங்கும் சிக்சர் மன்னன்!

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் சிக்சர் மன்னன் ரிஷப் பண்ட் களமிறங்க இருக்கிறார். அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா நியூசிலாந்து போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி விட்டு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. நியூசிலாந்தும் பாகிஸ்தான், வங்கதேச அணிகளை பந்தாடி விட்டு அரையிறுதிக்குள் வந்து விட்டது. 

24
சாம்பியன்ஸ் டிராபி

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இது முக்கியத்துவம்வாய்ந்த ஆட்டமாக மாறி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை  பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சிறிய காய பிரச்சனையுடன் போராடிய கேப்டன் ரோகித் சர்மா, நியூசிலாந்துக்கு  எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியானது.  

இதனால் சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் ரோகித் சர்மா விளையாடுவது உறுதியாகி உள்ளது. அதே வேளையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கால் வலியால் அவதிப்பட்ட முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமி விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஷமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாட இருக்கிறார். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து! அரையிறுதிக்கு சென்றது ஆஸ்திரேலியா!

34
ரிஷப் பண்ட்

மேலும் கடந்த இரண்டு ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு நியூசிலாந்து போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. அதாவது கே.எல்.ராகுலுக்கு பதிலாக இடது கை வீரர் ரிஷப் பண்ட் விளையாட இருக்கிறார். குல்தீப் யாதவ்க்கு பதிலாக தமிழ்நாடு வீரர் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியும் விளையாட உள்ளனர். இதேபோல் அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரையும் விளையாட வைகக் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

44
இந்தியா-நியூசிலாந்து போட்டி

ரோகித் சர்மா, சுப்மன் கில்லும் வழக்கம்போல் ஒப்பனிங்கில் களமிறங்க உள்ளனர். விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் விளையாட உள்ளனர். வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் களம் காண உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் வரிசையை நிரப்ப உள்ளார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா வேகப்பந்து வீச்சில் சாதிக்க உள்ளன.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா.

300வது ஒருநாள் போட்டியில் சாதனை நாயகன்! விராட் கோலியின் 5 சாதனைகள்

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories