சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா? வாய்ப்பு எப்படி?

Published : Feb 27, 2025, 08:51 AM IST

சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா? வாய்ப்பு எப்படி? என்பது குறித்து பார்க்கலாம். 

PREV
14
சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா? வாய்ப்பு எப்படி?
சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா? வாய்ப்பு எப்படி?

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முக்கியமான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்தது. இப்ராஹிம் சத்ரான் 146 பந்தில் 177 ரன்கள் அடித்தார். பின்பு விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அடுத்து ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ளது. அதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்ல முடியும். குருப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு சென்று விட்டன. ஆனால் குரூப் B-யில் அரையிறுதிக்குத் தகுதி பெற மூன்று அணிகளுக்கு இடையே இப்போது போட்டி உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், எந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பதை பார்ப்போம். 

24
சாம்பியன்ஸ் டிராபி

குருப் பி பிரிவில் ஆஸ்திரேலியா (3 புள்ளிகள், NRR 0.475), தென்னாப்பிரிக்கா (3 புள்ளிகள், NRR 2.14) மற்றும் ஆப்கானிஸ்தான் (2 புள்ளிகள், NRR -0.99) என்ற நிலையில் உள்ளன. வெள்ளிக்கிழமை லாகூரில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும். தென்னாப்பிரிக்கா சனிக்கிழமை இங்கிலாந்தை எதிர்கொள்ளும். இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் எந்த அணிகள் தகுதி பெறும் என்பதை இப்போது பார்ப்போம்.

இந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றால் தலா 5 புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஆனால் முதலிடத்தைப் பிடிப்பதில் ரன் ரேட் முக்கியமானது. தென்னாப்பிரிக்கா ஏற்கனவே ஆப்கானிஸ்தானை எதிர்த்து ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உதாரணமாக, தென்னாப்பிரிக்கா 300 ரன்கள் இலக்கை 1 ரன் வித்தியாசத்தில் வென்றால், NRR அடிப்படையில் ஆஸ்திரேலியா முன்னேற 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்! 8 ரன்களில் த்ரில் வெற்றி!

34
ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பு

அதே வேளையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தும் வென்றால் ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடனும், தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடனும் அரையிறுதிக்கு சென்று விடும். ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் எந்தவித சிக்கலும் இல்லாமல் அரையிறுதிக்கு சென்று விடும். தோற்றால் வெளியேறி விட வேண்டியதுதான். இதேபோல் ஆஸ்திரேலியா தோற்றாலும் வெளியேறி விடும். 

அதே வேளையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்தும் வென்றால் ஆப்கானிஸ்தான் உள்ளே சென்று விடும். ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா 2வது இடத்தில் இருக்கும். இதில் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெறும். இருப்பினும், 301 என்ற இலக்கைத் துரத்தும்போது தென்னாப்பிரிக்கா 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

44
ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான்

மழை காரணமாக ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்?

லாகூரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை போட்டி கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியா 4 புள்ளிகள் முன்னிலை பெறும். தென்னாப்பிரிக்கா இங்கிலாந்தை தோற்கடித்தால் 5 புள்ளிகளுடன் குழுவில் முதலிடத்தைப் பிடிக்கும்.

இங்கிலாந்து வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டும் தலா 3 புள்ளிகளுடன் இருக்கும். ஆப்கானிஸ்தானின் NRR தற்போது -0.99 ஆக உள்ளது. அரையுறுதிக்கு தகுதி பெற அந்த அணி தென்னாப்பிரிக்காவை 207 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். இது ஒரு கடினமான விஷயமாகும். 

சாதனை படைத்த ஜத்ரான்! சச்சின், கங்குலியை முந்தி அபார சதம் அடித்த ஆப்கன் வீரர்!

Read more Photos on
click me!

Recommended Stories