ஒன் லாஸ்ட் டைம்! டீசர்ட்டில் சஸ்பென்ஸ் வைத்த 'தல' தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்?

Published : Feb 27, 2025, 07:52 AM ISTUpdated : Mar 13, 2025, 03:45 PM IST

மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே பயிற்சி முகாமில் கலந்து கொள்ள சென்னை வந்தார். அவர் டீசர்ட்டில் ஒன் லாஸ்ட் டைம் என எழுதி இருப்பதால் இதுதான அவரது கடைசி ஐபிஎல் தொடரா? என கேள்வி எழுந்துள்ளது.

PREV
14
ஒன் லாஸ்ட் டைம்! டீசர்ட்டில் சஸ்பென்ஸ் வைத்த 'தல' தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்?
ஒன் லாஸ்ட் டைம்! டீசர்ட்டில் சஸ்பென்ஸ் வைத்த 'தல' தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்?

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL)ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. மே 25 அன்று இறுதிப் போட்டி நடைபெறும். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியுடன் மோதவுள்ளது. மே 18ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்க உள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. 

இதனைத் தொடர்ந்து மே 20ம் தேதி குவாலிபயர் முதல் போட்டி நடக்கிறது. மே 21ம் தேதி எலிமினேட்டர் போட்டி நடக்கிறது. மே 23ம் தேதி குவாலிபயர் 2ம் போட்டி நடக்கிறது. மே 25ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 2025 ஐபிஎல் தொடரை தங்களுக்கு பிடித்தமான அணிதான் கைப்பற்றும் என ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளத்தில் முட்டி மோதத் தொடங்கி விட்டனர். இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன.

24
ஐபிஎல் 2025

ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ். மகேந்திர சிங் தோனி தலைமையில் 5 முறை ஐபில் கோப்பையை கையில் ஏந்தியுள்ள சிஎஸ்கே, இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கேற்ப ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கி வைத்துள்ளது.

சிஎஸ்கே அணி முதல் லீக் ஆட்டத்தில் மார்ச் 23ஆம் தேதி பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிகிறது. ஐபிஎல் அட்டவணை அறிவிக்கபட்டதால் அனைத்து அணிகளும் பயிற்சிக்கு தயாராகி விட்டன. சென்னை அணி இப்போதே பயிற்சி முகாமுக்கு ஆயத்தமாகி விட்டது. இந்த முகாமில் மகேந்திர சிங் தோனி, கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் உள்பட சிஎஸ்கே வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்! 8 ரன்களில் த்ரில் வெற்றி!

34
சிஎஸ்கே-தோனி

இந்நிலையில், சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி முகாமில் கலந்து கொள்ள சென்னை வந்தார். தோனி அணிந்திருந்த டீச‌ர்ட்டில் ஒன் லாஸ்ட் டைம் one last timeஎன எழுதப்பட்டு இருந்தது. இதன்மூலம் தோனி சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறைமுக செய்தியை உணர்த்துவதாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

தோனிக்கு 43 வயதாகிறது. ஆகவே இதுதான் அவரது கடைசி ஐபிஎல் தொடரா? அவர் தொடர்ந்து விளையாடுவாரா? என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இதுதான் எனக்கு கடைசி ஐபிஎல் என தோனி உணர்த்துவதுபோல் டீசர்ட் அணிந்து வந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

44
சிஎஸ்கே ரசிகர்கள்

வயதாகி விட்டதால் இத்துடன் கிரிக்கெட்டுக்கு விடை பெற்று விடலாம் என தோனி முடிவெடுத்துள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் ருத்ராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக பரிந்துரை செய்ததாகவும் தகவல் பரவி வருகிறது. இது சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சமூகவலைத்தளங்களில் அவர்கள் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

சாதனை படைத்த ஜத்ரான்! சச்சின், கங்குலியை முந்தி அபார சதம் அடித்த ஆப்கன் வீரர்!

Read more Photos on
click me!

Recommended Stories