Rohit Sharma and Bumrah
ரோகித் சர்மா அதிரடி நீக்கம்
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த கடைசி டெஸ்ட்டில் ரோகித் சர்மா நீக்கப்படுவார்; பும்ரா கேப்டனாக செயல்படுவார் என நேற்று இருந்து தகவல்கள் பரவின. அதன்படி இன்று 5வது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில், ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை.
Rohit Sharma Dropped 5th Test
பேட்டிங், கேப்டன்சியில் சொதப்பல்
முதல் டெஸ்ட்டில் கேப்டனாக இருந்த பும்ரா, கடைசி டெஸ்ட்டில் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம்பெறாதது யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் இந்த தொடர் முழுவதும் படுமோசமாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 6 சராசரியுடன் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதேபோல் கேப்டன்சியிலும் கடுமையாக சொதப்பினார்.
ரோகித் சர்மா நீக்கம்; பும்ரா கேப்டன்; வழக்கம்போல் கோலி அவுட்; விக்கெட்கள் இழந்து பரிதவிக்கும் இந்தியா!
Jasprit Bumrah-Gautam Gambhir
நீக்கப்பட்டாரா? இல்லை ஒதுங்கினாரா?
களத்தில் பீல்டிங் செட் செய்வது மட்டுமின்றி பவுலர்களை ரொட்டேட் செய்வதிலும் ரோகித் சர்மா தடுமாறினார். இதனால் அவர் அணியில் இடம்பெறாதது அனைவரும் எதிபார்த்தது என்றாலும் அவர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டாரா? இல்லை தானே முன்வந்து கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கினாரா? என்பது தெரியவில்லை.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு தோல்விக்கு பிறகு ரோகித் சர்மாவை கடிந்து கொண்ட பயிற்சியாளர் கவுதம் கம்பீர், 'கடைசி டெஸ்ட்டில் நீங்கள் இடம்பெற மாட்டீர்கள்' என ரோகித்திடம் நேரடியாக சொல்லி விட்டதாவும், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் மறுபக்கம் ரோகித் சர்மா நீக்கப்படவில்லை; அவரே தான் கடைசி டெஸ்ட்டில் இருந்து ஒதுங்கினார்.
India vs Australia 5th Test
விளக்கம் அளித்த பும்ரா
மெல்போர்ன் டெஸ்ட் தோல்வியால் மனவேதனை அடைந்த அவர் இனிமேலும் அணிக்கு பாரமாக இருக்க வேண்டாம் என்று கருதி தானாக விலகி விட்டார் என்று தகவலக்ள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், கடைசி டெஸ்ட்டில் ரோகித் சர்மா இடம்பெறாததது குறித்து பும்ரா விளக்கம் அளித்துள்ளார்.
5வது டெஸ்ட் போட்டியில் டாஸுக்கு பிறகு பேசிய பும்ரா, ''எங்கள் கேப்டன் ரோகித் சர்மா தனது தலைமை பண்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இது அணியில் ஒற்றுமை உள்ளது; சுயநலம் இல்லை என்பதை காட்டுகிறது. அணியின் நலனுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்கிறோம்'' என்றார்.
இந்நிலையில், 5வது டெஸ்ட்டில் பும்ரா தலைமையில் களம் கண்ட இந்திய அணி 100 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் (10 ரன்), கே.எல்.ராகுல் (4), விராட் கோலி (17), சுப்மன் கில் (20) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு 'கேல் ரத்னா'; தமிழக வீராங்கனைகள் 3 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு!