Jaiswal vs Fernando: இலங்கை வீரருடன் மோதல்! ஜெய்ஸ்வால் 5 போட்டிகளில் விளையாட தடையா? ஐசிசி ரூல்ஸ் என்ன?

Published : Aug 23, 2026, 10:57 PM IST

Jaiswal vs Fernando: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின்போது எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்ட இந்திய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. களத்தில் என்ன நடந்தது? என பார்ப்போம்.

PREV
15
தேவையில்லாத வேலை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட டீம் இந்தியாவின் இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரு பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித ஃபெர்னாண்டோவுடன் ஏற்பட்ட சண்டையும், ஹெல்மெட்டால் அவர் முகத்தில் முட்டிய சம்பவமும் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

25
2வது டெஸ்ட்டில் என்ன நடந்தது?

போட்டியின் முதல் நாளான இன்றைய ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் 45 ரன்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்தபோது, அசித ஃபெர்னாண்டோவின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். அப்போது, பவுலர் அவரை வழியனுப்பி வைப்பது போல கிண்டல் செய்ததால் (சென்ட் ஆஃப்) கோபமடைந்த ஜெய்ஸ்வால், பெவிலியன் திரும்பாமல் மீண்டும் பவுலரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு நிற்காமல், ஃபெர்னாண்டோவின் முகத்தோடு முகத்தை வைத்து வேகமாக முட்டினார். இலங்கை அணி வீரர்கள் ஜெய்ஸ்வாலை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

35
5 டெஸ்ட் அல்லது 10 ஓடிஐ போட்டிகளில் தடையா?

ஐசிசி (ICC) மற்றும் எம்சிசி (MCC) விதிகளின்படி, எதிரணி வீரரைத் தாக்குவது அல்லது உடல்ரீதியாக மோதுவது 'லெவல் 4' (Level 4) பிரிவின் கீழ் வரும் ஒரு கடுமையான குற்றமாகும். போட்டி நடுவர் (Match Referee) இதை சீரியஸாகக் கருதினால், ஜெய்ஸ்வாலுக்குக் கீழ்க்கண்ட தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது:

5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை. அல்லது 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை.

வன்முறை மிகவும் தீவிரமானது என நிரூபிக்கப்பட்டால், ஆயுட்காலத் தடை விதிக்கவும் இந்த விதியில் இடமுள்ளது.

45
ஜெய்ஸ்வாலுக்கு இது முதல் முறையல்ல

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மைதானத்தில் இப்படி நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. 2022-ல் நடந்த துலீப் டிராபி போட்டியின்போது, ரவி தேஜா என்ற வீரருடன் இதேபோல வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அம்பயர் எச்சரித்தும் கேட்காததால், வெஸ்ட் ஸோன் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.

தற்போது கொழும்பு டெஸ்டில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோக்களை போட்டி நடுவர் ஆய்வு செய்து வருகிறார். விரைவில் அவர் தனது தீர்ப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் வளர்ந்துவரும் நட்சத்திரமாகக் கருதப்படும் ஜெய்ஸ்வாலின் இந்த ஆக்ரோஷமான நடத்தை, இப்போது அவரது இடத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

55
ஜெய்ஸ்வால் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்த நிலையில், களத்தில் ஜெய்ஸ்வாலின் செயலை இந்திய அனியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்கும் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சிதான்ஷு கோடக், ''ஆட்டத்தின் சூட்டில் பந்துவீச்சாளர் ஏதோ சொல்லியிருக்கலாம். ஜெய்ஸ்வால் அவ்வளவு நெருக்கமாக போயிருக்கக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், களத்தில் இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான்'' என்று கூறியுள்ளார்.

பொதுவாக பலம்வாய்ந்த இரு நாடுகளுக்கு இடையிலான போட்டியில் களத்தில் வீரர்கள் இடையே வார்த்தை போர் ஏற்படுவது இயல்புதான். ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்திய பவுலர் அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். ஜெய்ஸ்வாலும் அதற்கு பதிலடியாக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் அந்த பவுலருடன் நெருங்கி வந்து ஹெல்மெட்டால் அவரது தலையில் முட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய ரசிகர்களே தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories