உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு, அதற்கு சர்தார் படேல் ஸ்டேடியம் என்று பெயர் சூட்டப்பட்டது. உலகிலேயே இதுவரை எந்த ஸ்டேடியத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,10,000 பேர் அமரும் வகையில், நவீன வசதிகளுடன் இந்த ஸ்டேடியம் கட்டட்ப்பட்டது.
இந்த ஸ்டேடியத்தில் இன்று இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதுதான் இந்த ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி. இதையடுத்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், உலகின் மிகப்பெரிய இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்துவைத்தார்.