சர்வதேச கிரிக்கெட்டில் அக்தர் வரலாற்று சாதனை படைத்த தினம் இன்று..!

First Published Feb 22, 2021, 8:08 PM IST

பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக பந்தை வீசிய தினம் பிப்ரவரி 22.
 

ஃபாஸ்ட் பவுலர்கள் என்றாலே பாகிஸ்தான் தான். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் பாகிஸ்தானியர்களாகவே இருந்துள்ளனர்.
undefined
அந்தவகையில், ஆல்டைம் சிறந்த, மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஷோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக பந்தை வீசிய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் அக்தர். அந்த சாதனையை 2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் தான் படைத்தார்.
undefined
2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 161.3 கிமீ வேகத்தில் நிக் நைட்டுக்கு ஒரு பந்தை வீசினார் அக்தர். அதுதான் சர்வதேச கிரிக்கெட்டில் வீசப்பட்ட அதிவேக பந்து. அந்த சாதனையை அக்தர் படைத்த தினம் இன்று(பிப்ரவரி 22). அந்த ஓவரில் எஞ்சிய 5 பந்துகளையும் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசி நிக் நைட்டை மிரட்டியதன் விளைவாக அந்த ஓவர் மெய்டனாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!