இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட்டில் இந்திய அணி பெற்ற வெற்றி, விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய மண்ணில் இந்திய அணி பெற்ற 21வது டெஸ்ட் வெற்றி. அதன்மூலம் இந்திய மண்ணில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை சமன் செய்தார் கோலி.
எனவே வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால், இந்திய மண்ணில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை(22) பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைப்பார்.