மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் செப்டம்பர் 30ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025க்கான USD 13.88 மில்லியன் (தோராயமாக 122 கோடி ரூபாய்) பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. இது 2023 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை பரிசுத்தொகையை விட USD 3.88 மில்லியன் அதிகம்.
26
பரிசுத்தொகை அதிகரிப்பு
2022ல் நியூசிலாந்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பையில் மொத்த பரிசுத்தொகை USD 3.5 மில்லியன் மட்டுமே. இப்போது அது 297 சதவீதம் அதிகரித்துள்ளது. வெற்றி பெறும் அணி USD 4.48 மில்லியன் பெறும். இது 2022ல் ஆஸ்திரேலியா பெற்ற USD 1.32 மில்லியனை விட 239 சதவீதம் அதிகம். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு USD 2.24 மில்லியன், அரையிறுதிக்கு வரும் அணிகளுக்கு தலா USD 1.12 மில்லியன் பரிசுத்தொகை கிடைக்கும்.
36
ஒவ்வொரு போட்டி வெற்றிக்கும் சிறப்பு போனஸ்
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் USD 250,000 (தோராயமாக ரூ. 2.19 கோடி) பெறும். லீக் சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு வெற்றிக்கும் கூடுதலாக USD 34,314 (தோராயமாக 30.18 லட்சம்) கிடைக்கும். ஐந்தாவது, ஆறாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா USD 700,000 (தோராயமாக ரூ. 6.15 கோடி), ஏழாவது, எட்டாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா USD 280,000 (தோராயமாக ரூ. 2.46 கோடி) வழங்கப்படும்.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா கூறுகையில், “இந்த அறிவிப்பு மகளிர் கிரிக்கெட்டில் ஒரு மைல்கல். கணிசமாக அதிகரிக்கப்பட்ட இந்த பரிசுத்தொகை கிரிக்கெட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு நாங்கள் செய்யும் பணிகளை தெளிவாகக் காட்டுகிறது. பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண்கள் அளவிலான மரியாதை கிடைக்க வேண்டும்” என்றார். மேலும், “எதிர்கால தலைமுறை வீரர்களையும், ரசிகர்களையும் ஊக்குவிக்கும் வகையில் உலகக் கோப்பையை வழங்குவதே எங்கள் நோக்கம்” என்று ஜெய் ஷா குறிப்பிட்டார்.
56
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025
இந்த முறை மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 13வது பதிப்பாக நடைபெற உள்ளது. இந்தியா, இலங்கையில் நடைபெறும் இந்த தொடருக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும், இந்த வாரம் முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. 2022 உலகக் கோப்பை டிக்கெட்டுகள் போட்டிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே விற்பனைக்கு வந்தன.
66
பரிசுத்தொகை முழு விவரங்கள்
• மொத்த பரிசுத்தொகை: USD 13.88 மில்லியன் (தோராயமாக 122 கோடி ரூபாய்)
• வெற்றியாளர்: USD 4.48 மில்லியன் (தோராயமாக ரூ. 39 கோடி)
• இரண்டாம் இடம்: USD 2.24 மில்லியன் (தோராயமாக 19 கோடி ரூபாய்)
• அரையிறுதி வீரர்கள்: தலா USD 1.12 மில்லியன் (தோராயமாக 9.84 கோடி ரூபாய்)
• லீக் போட்டி வெற்றிக்கு: USD 34,314 (தோராயமாக 30.18 லட்சம்)
• ஒவ்வொரு அணிக்கும் உத்தரவாதம்: USD 250,000 (தோராயமாக 2.29 கோடி)