2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள நிலையில், உலகக்கோப்பைக்காக தோனியை இந்திய அணியின் ஆலோசராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தி, அழுத்த நிலைகளில் கட்டுப்பாடு மற்றும் பெரிய போட்டிகளின் அனுபவம், இளம் அணியை வழிநடத்த உதவும் என்று BCCI நம்புகிறது. இதற்காக தோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
2021 டி20 உலகக் கோப்பையில் தோனி ஆலோசகர்
ஆசியக் கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தோனிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஆனால் இதை தோனி ஏற்பாரா? என்பது தெரியவில்லை. இந்திய அணியில் தோனியின் மெண்டர் பயணம், 2021 டி20 உலகக் கோப்பையுடன் தொடங்கியது. ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, BCCI அவரை இந்திய அணிக்கு வழிகாட்டியாக அழைத்தது. அப்போது விராட் கோலி கேப்டனாகவும், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவும் இருந்தனர்.