கேரள கிரிக்கெட் லீக் இரண்டாம் சீசனில் மீண்டும் ஆட்ட நாயகன் விருதை கோச்சி ப்ளூ டைகர்ஸின் சஞ்சு சாம்சன் வென்றார். திருவனந்தபுரம் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன். அவர் ஐந்து சிக்ஸர்களும் நான்கு பவுண்டரிகளும் விளாசினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு, ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தபோதும் 15வது ஓவர் வரை நிலைத்து நின்றார்.
24
மீண்டும் அதிரடியில் கலக்கிய சஞ்சு சாம்சன்
தொடக்க விக்கெட்டில் வினூப் மனோகரனுடன் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ப்ளூ டைகர்ஸுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார். தொடர்ந்து நான்காவது விக்கெட்டில் நிக்கிலுடன் 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பதினைந்தாவது ஓவரில் அபிஜித் பிரவீணுக்கு விக்கெட் கொடுத்து சஞ்சு சாம்சன் வெளியேறினார். ரன் ரேட்டை உயர்த்த முயன்றபோது சஞ்சீவ் சதீஷனுக்கு கேட்ச் கொடுத்தார். பின்னர் பீல்டிங்கிற்கு வந்தபோது ஒரு கேட்சையும் சஞ்சு சாம்சன் பிடித்து அசத்தினார்.
34
அடுத்தடுத்து அசத்தல் ஆட்டம்
முதல் கேசிஎல் விளையாடும் சஞ்சு இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருதை வெல்கிறார். கொல்லம் சைலர்ஸுக்கு எதிரான போட்டியிலும் சஞ்சுவுக்கே ஆட்டநாயகன் விருது கிடைத்தது. அப்போது அவர் சதம் அடித்து அசத்தி இருந்தார். ஒரு சதம், 2 அரை சதம் என அடுத்தடுத்து கலக்கி வரும் சஞ்சு சாம்சன், ஐந்து போட்டிகளில் 285 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் போட்டியில் ராயல்ஸுக்கு எதிராக சஞ்சுவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆலப்புழி ரிப்பிள்ஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 22 பந்துகளில் 12 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் கொல்லம் சைலர்ஸுக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார்
ஆசியக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா?
திருச்சூர் டைட்டன்ஸுக்கு எதிராக 46 பந்துகளில் 89 ரன்களும் சஞ்சு சாம்சன் எடுத்தார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். ஆனால் சுப்மன் கில்லால் அவரது இடம் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இப்போது கேரள கிரிக்கெட் லீக்கில் தொடர் ரன்வேட்டையில் ஈடுபட்டு வருவதால் சஞ்சு சாம்சனின் இடம் கன்பார்ம் ஆகியுள்ளது.