சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐபிஎல்லில் அடுத்த சீசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த அவர் சிஎஸ்கேவில் விளையாடுவது எனக்கு பெருமையளிக்கிறது என்று கூறிவந்த நிலையில், திடீரென ஓய்வு பெற்றுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சீசனில் சொதப்பிய அஸ்வின்
கடந்த ஐபிஎல் சீசனில் படுமோசமாக விளையாடிய சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மோசமான நிலையை சந்தித்தது. கூல் கேப்டன் தோனி இருந்தபோதும் அவரால் பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. இதேபோல் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சிஸ்கேவில் கால்பதித்த அஸ்வினும் கடந்த சீசனில் பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் சொதப்பினார். ஒன்பது போட்டிகளில் விளையாடிய அஸ்வின் ஏழு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். அவரது ஓவரில் சர்வசாதாரணமாக ரன்கள் சென்றன.