நீங்க உண்மையிலேயே சச்சின் தானா?? சட்டென கேட்ட ரசிகர்..! 'தக் லைஃப்' ரிப்ளை கொடுத்த Sachin

Published : Aug 26, 2025, 03:39 PM IST

நீங்க உண்மையிலேயே சச்சின் தானா? என்று கேள்வி கேட்ட ரசிகருக்கு சச்சின் அளித்த நகைச்சுவையான பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
14
Sachin Tendulkar's Viral Reddit AMA Session

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ரெடிட் (Reddit) சமூக வலைத்தளத்தில் Ask Me Anything (AMA) என்ற கேள்வி பதில் அமர்வில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் தான் விளையாடியதில் மறக்க முடியாத இன்னிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ரசிகர்களுடன் பேசினார். ரெடிட் தளத்தில் ரசிகர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர் பொறுமையகாவும், ஜாலியாகவும் பதில் அளித்தார்.

24
சச்சின் மீது சந்தேகம் கொண்ட ரசிகர்

அப்போது சச்சின் டெண்டுல்கர் தான் நம்முடன் பேசுகிறாரா? என்று சந்தேகம் அடைந்த ஒரு ரசிகர், சச் மேன் சச்சின் டெண்டுல்கர் ஹெய் க்யா (நீங்கள் உண்மையாகவே சச்சின் டெண்டுகர் தானா?) சரிபார்ப்புக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்ப முடியுமா? என்று கேட்டார். அவர் கேட்ட கேள்வியால் ரெடிட் தளத்தில் இருந்த மற்ற ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி சட்டென கேள்வி கேட்ட ரசிகருக்கு சச்சின் டெண்டுல்கர் கொடுத்த நகைச்சுவையான பதில் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் சிரிக்க வைத்தது.

சச்சின் கொடுத்த பதில் இதுதான்

அதாவது சச்சின் கேள்வி கேட்ட அந்த ரசிகருக்கு பதில் அளிக்கும் விதமாக பெரிய திரையின் முன் நின்று, அந்தப் பக்கத்தை நோக்கி விரல் சுட்டிக்காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். தொடர்ந்து இது மட்டும் போதுமா? அபி ஆதார் பீ பேஜு க்யா?" (இப்போது ஆதார் கார்டையும் காட்ட வேண்டுமா?) என்று பதில் அளித்தார். சச்சின் அளித்த இந்த 'தக் லைஃப்' ரிப்ளையால் கேள்வி கேட்ட ரசிகரும், மற்ற ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

34
சச்சின் பேட்டிங்கை நேரில் கண்டதில்லை

இதேபோல் மற்றொரு ரசிகர் ஒருவர், ''நான் எப்போதும் உங்கள் பேட்டிங்கை நேரில் கண்டதில்லை'' என வருத்தத்துடன் தெரிவித்தார். இதற்கு உடனே பதில் அளித்த சச்சின், ''எனது பேட்டிங் வீடியோக்களைப் பார்க்கும்போது, என் காலத்தில் ஒரு வீரர் இருந்தார் என உங்கள் குழந்தைகளிடம் கூறுங்கள். அதுவே எனக்கு போதும்'' என்று கூறியதால் மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்தது.

44
விராட் கோலி, ஜோ ரூட்டுக்கு புகழாரம்

மேலும் மும்பை தாக்குதலுக்கு பிறகு 2008ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடியது தன்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என சச்சின் தெரிவித்தார். 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங்குக்கு முன்பாக தான் தான் தோனியை களமிறக்கியதாக சச்சின் கூறினார். இது தவிர தனது சாதனையை முறியடித்த விராட் கோலி குறித்து பெருமிதம் தெரிவித்த சச்சின், தன்னுடைய டெஸ்ட் ரன்களை நெருங்கி வரும் ஜோ ரூட்டும் வாழ்த்து தெரிவித்து அவர் தலைசிறந்த வீரர் என்று கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories