Wiaan Mulder: 367 ரன்கள்! லாராவின் சாதனையை முறியடிக்க சான்ஸ் இருந்தும் டிக்ளேர் செய்த வியான் முல்டர்! ஏன்?

Published : Jul 07, 2025, 08:16 PM IST

தென்னாப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 367 ரன்கள் அடிதது டிக்ளேர் செய்தார். லாராவின் சாதனைக்கு 33 ரன்களே தேவைப்பட நிலையில் டிக்ளேர் செய்து அனவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். 

PREV
14
Wiaan Mulder Declared After scoring 367 Runs In Test cricket

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி டோனி டி சோர்ஸி (0), லெசெகோ செனோக்வானே (3) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. 

ஆனால் அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டர் தொடக்கம் முதலே ஓடிஐ போட்டி போன்று அதிரடியாக விளையாடினார். ஜிம்பாப்வே பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து பவுண்டரிகளாக ஓடவிட்டார்.

24
ருத்ரதாண்டவமாடிய வியான் முல்டர்

முதலில் சதம் அடித்த அவர் பின்பு இரட்டை சதம் இதனைத் தொடர்ந்து முச்சதமும் அடித்து அசத்தினார். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்க்ள் எடுத்திருந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த வியான் முல்டர் 334 பந்துகளில் 49 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 367 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். டெஸ்ட் போட்டியில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா மட்டுமே இருக்கிறார்.

367 ரன்னில் டிக்ளேர்

பிரையன் லாராவின் இந்த சாதனையை முறியடிக்க வியான் முல்டருக்கு 33 ரன்களே தேவைப்பட்டது. இதனால் அவர் லாராவின் சாதனையை தகர்த்தெறிந்து வரலாறு படைப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், வியான் முல்டர் திடீரென தென்னாப்பிரிக்கா அணி டிக்ளேர் செய்யும் என அறிவித்தார். இதனால் தென்னாப்பிரிக்க வீரர்கள், பயிற்சியாளர்கள் மட்டுமின்றி ஜிம்பாப்வே வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். போட்டியை பார்த்த ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

34
அனைவருக்கும் ஆச்சரியம்

ஏனெனில் இது போட்டியின் 2ம் நாளின் தொடக்கம் தான். அதுவும் முல்டர் டிரா முடிவை அறிவிக்கும்போது தென்னாப்பிரிக்கா அணி 114 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 626 ரன்கள் எடுத்திருந்தது. 5.49 ரன் ரேட்டில் ஆடிக் கொண்டிருந்தது. இன்னும் 3 ஓவர்கள் விளையாடி இருந்தாலே முல்டர் 400 ரன்களை கடந்திருப்பார். அது மட்டுமின்றி போட்டியில் இன்னும் மூன்றரை நாட்கள் இருக்கும் நிலையில், வியான் முல்டர் டிக்ளேர் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

டிக்ளேர் செய்ய வேண்டிய அவசியமில்லை

வியான் முல்டரின் இந்த முடிவு கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. 99 ரன்னில் இருந்து 1 ரன் அடிக்க சில பேட்ஸ்மேனகள் அதிக பந்துகளை வீணடிக்கும் நிலையில், வரலாற்று சாதனைக்கு 33 ரன்களே தேவைப்பட்டபோது வியான் முல்டர் டிக்ளேர் செய்தது அதிசயம் என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். அணியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருந்தாலும் போட்டிக்கு மூன்றை நாட்கள் மீதமிருப்பதாலும் எதிரணி கத்துக்குட்டியான ஜிம்பாப்வே என்பதாலும் அவசரமாக டிக்ளேர் செய்ய வேண்டிய அவசியமில்லை.

44
டெஸ்ட் கிரிக்கெட்டின் பிராண்ட்

ஆனாலும் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இளம் வீரர் வியான் முல்டருக்கு கிடைத்தும் பிரையன் லாரா மீது கொண்ட மதிப்பு காரணமாக 367 ரன்களுடன் தனது ஆட்டத்தை அவர் நிறுத்திக் கொண்டார். 1998ல் மார்க் டெய்லர் 334 ரன்கள் எடுத்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்த பிறகு கூடுதலாக ஒரு ரன் அடிக்காமல் பிராட்மேன் மீது கொண்ட மரியாதை காரணமாக டிக்ளேர் செய்தார். இப்போது வியான் முல்டரும் அதேபோல் செய்திருப்பது பிரையன் லாரா டெஸ்ட் கிரிக்கெட்டின் பிராண்ட் என்பதை இந்த உலகத்துக்கு எடுத்துரைத்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories