மேலும் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியாவில் நடந்தாலும் சரி, வெளிநாடுகளில் நடந்தாலும் சரி ஆட்டம் தொடங்கிய ஒன்றரை மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து உணவு இடைவேளை (Lunch Break) விடப்படும். பின்பு அன்றைய நாள் முடியும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தேநீர் இடைவேளை (Tea Break) விடப்படும். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை காலை 11.30 மணி முதல் மதியம் 12.10 மணி வரை உணவு இடைவேளை விடுவது வழக்கம். மாலையில் தேநீர் இடைவேளை இருக்கும்.
லன்ட் டைம், டீ டைம் என்ன?
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கவுகாத்தி டெஸ்ட்டில் முதலில் தேநீர் இடைவேளையும் (Tea Break), அதன்பிறகு மதிய உணவு இடைவேளையும் (Lunch Break) விடப்பட உள்ளது. அதாவது காலை 11:00 மணி முதல் காலை 11:20 மணி வரை தேநீர் இடைவேளையும், பிற்பகல் 1:20 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மதிய உணவு இடைவேளை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.