இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் இந்த டர்னிங் டிராக் பிட்ச்சை அமைக்க சொன்னதாக தெரிவித்தார். இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் 22ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பர்சபரா பிட்ச் ரிப்போர்ட் குறித்து விரிவாக பார்க்கலாம். கொல்கத்தாவில் கருப்பு களிமண்ணால் செய்யப்பட்ட பிட்ச் இருந்த நிலையில், கவுகாத்தியில் சிவப்பு களிமண் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
சீரான வேகம் மற்றும் பவுன்ஸ்
சிறிதளவு புல் இருந்தாலும், போட்டிக்கு முந்தைய நாள் அது வெட்டப்பட வாய்ப்புள்ளது. இதனால், பிட்ச் மேலும் வறண்டு, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு மண்ணால் செய்யப்பட்ட பிட்ச்களை விட சிவப்பு மண் பிட்ச்கள் வேகமாக வறண்டுவிடும். ஆனால் முதல் நாட்களில் கணிக்க முடியாத பவுன்ஸை எதிர்பார்க்க முடியாது. சீரான வேகம் மற்றும் பவுன்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.