கேமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு ஏலம்.. ஆனால் கைக்கு ரூ.18 கோடி தான் கிடைக்கும்.. ஏன் தெரியுமா?

Published : Dec 16, 2025, 03:46 PM IST

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் வெளிநாட்டு வீரர் கேமரூர் கிரீன் தான். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீரரும் இவர் தான்.

PREV
14
ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்கு 350 வீரர்கள் களமிறங்கிய நிலையில், தொடக்கம் முதலே ஏலத்தில் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. அதிரடி வீரர்கள் ஆஸ்திரேலியாவின் பிரைசர் மெக்கர்க், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஏலம் போகவில்லை.

24
கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலம்

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் அனைவரும் எதிர்பார்த்தபடியே அதிக விலைக்கு ஏலம் போனார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீனை தட்டித் தூக்கியுள்ளது. 

கேமரூன் கிரீனை எடுக்க சிஎஸ்கேவும், கொல்கத்தாவும் தொடக்கம் முதலே போட்டி போட்டன. இதனால் கிரீன் மதிப்பு ரூ.5 கோடி, ரூ.10 கோடி, ரூ.20 கோடி, ரூ.25 கோடிக்கு சென்றன. முடிவில் சிஎஸ்கே பின்வாங்கிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுத்துள்ளது.

34
கேமரூன் கிரீன் கைக்கு ரூ.18 கோடி தான் கிடைக்கும்

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் வெளிநாட்டு வீரர் கேமரூர் கிரீன் தான். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீரரும் இவர் தான். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாலும் அவருக்கு ரூ.18 கோடி தான் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

44
ஐபிஎல் புதிய விதி இதுதான்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பிசிசிஐ மினி ஏலத்திற்கான புதிய விதியை அறிமுகப்படுத்தியது. அதாவது வெளிநாட்டு வீரர்கள் முந்தைய ஏலத்தில் உரிமையாளர்களுக்குக் கிடைத்த அதிகபட்ச தக்கவைப்பு ஸ்லாப் ரூ.18 கோடியாக உள்ளது.

 வெளிநாட்டு வீரர்கள் இந்த 18 கோடிக்கு மேல் எந்த தொகைக்கு ஏலம் போனாலும் அவர்களுக்கு ரூ.18 கோடி தான் கைக்கு கிடைக்கும். மீதமுள்ள தொகை வீரர்களின் நலவாரியத்துக்கு செலவிடப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories