IND vs SA 4வது T20: ஒருவழியாக சுப்மன் கில் நீக்கம்.. இந்திய அணியில் 3 மாற்றங்கள்.. பிளேயிங் லெவன்!

Published : Dec 16, 2025, 01:43 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சுப்மன் கில் நீக்கப்படுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
இந்தியா, தென்னாப்பிரிக்கா 4வது T20

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும், 3வது போட்டியில் மீண்டும் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 

இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 17) லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

24
சுப்மன் கில் நீக்கம்

4வது டி20 போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் சுப்மன் கில் ஒருவழியாக நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் டி20 போட்டியில் 4 ரன்னில் ஆட்டமிழந்த கில், 2வது போட்டியில் டக் அவுட் ஆனார். 3வது போட்டியில் தட்டுத்தடுமாறி 28 ரன்கள் அடித்தார். இதனால் சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட உள்ளார்.

34
வாஷிங்டன் சுந்தருக்கு மீண்டும் இடம்

மேலும் தொடர் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அவருக்கு பதிலாக 3வது போட்டியில் பங்கேற்காத ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணியில் விளையாடுகிறார். 

இதேபோல் காயம் காரணமாக அக்சர் படேல் விளையாடததால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம்பெறுகிறார். தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களமிறங்குவர்கள்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்

அதன்பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே பேட்டிங்கில் செய்வார்கள். ஸ்பின் வரிசையில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். பாஸ்ட் பவுலிங்கில் பும்ரா, ஹர்சித் ராணா, ஷிவம் துபே ஆகியோர் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது டி20 போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

Read more Photos on
click me!

Recommended Stories