IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!

Published : Dec 15, 2025, 09:16 PM IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் அக்சர் படேல் விளையாடினார். உடல்நலக்குறைவு காரணமாக தரம்சாலாவில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. 

PREV
14
இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20யில் இருந்து அக்சர் படேல் விலகல்

இந்திய அணி ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் உடல்நலக்குறைவு காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் லக்னோவில் இந்திய அணியுடன் இருப்பார் என்றும், படேலுக்கு மேலும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

24
ஷாபாஸ் அகமது இந்திய அணியில் சேர்ப்பு

அக்சர் படேலுக்குப் பதிலாக மீதமுள்ள 2 டி20 போட்டிகளுக்கும் ஷாபாஸ் அகமது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி வீரர்கள் நிறைய பேர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமர்ந்திருக்க எங்கிருந்தோ ஷாபாஸ் அகமதுவை பிசிசிஐ அணியில் சேர்த்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது டி20 போட்டி டிசம்பர் 17 (நாளை மறுநாள்) அன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி டிசம்பர் 19 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.

34
அக்சர் படேல் விலகல் பின்னடைவுதான்

உடல்நலக்குறைவு காரணமாக அக்சர் படேல் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டி20 போட்டிகளில் அக்சர் படேல் விளையாடினார்.

 உடல்நலக்குறைவு காரணமாக தரம்சாலாவில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அக்சர் இரண்டு போட்டிகளில் 22.00 சராசரியில் 44 ரன்கள் எடுத்தார். 11.33 பந்துவீச்சு சராசரியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

44
கடைசி 2 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷாபாஸ் அகமது.

Read more Photos on
click me!

Recommended Stories