18வது ஓவரில் அவர் 4 பந்துகள் வீசிய நிலையில், அதன்பிறகு அவர் தொடர்ந்து பந்துவீச நடுவர் மறுத்து விட்டார். அவரிடம் இருந்து பந்தை வாங்கிய நடுவர் பிரிஸ்பேன் ஹீட் அணி கேப்டனிடம் கொடுத்தார். அதன்பிறகு மீதி 2 பந்துகளையும் வெறோரு பவுலர் வீசினார். ஆஸ்திரேலிய டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் ஷாஹீன் அப்ரிடி விளையாடுவது இதுவே முதன்முறை.
பிக் பாஷ் லீக்கின் அறிமுக போட்டியிலேயே மோசம்
இந்த தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக அறிமுகமான அவர் மெல்போர்ன் ரெனகேட்ஸுக்கு எதிரான தனது முதல் அறிமுக போட்டியிலேயே பெரும் அவமானத்தை சந்தித்துளார். மேலும் மிக மோசமாக பந்து வீசிய ஷாஹீன் அப்ரிடி 2.4 ஓவர்களில் எந்த ஒரு விக்கெட்டும் எடுக்காமல் 43 ரன்களை வாரி வழங்கினார்.
தான் வீசிய 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். 2.4 ஓவர் ஸ்பெல்லில் அப்ரிடி மூன்று நோ பால்களையும் இரண்டு வைடுகளையும் வீசினார். இதேபோல் பேட்டிங்கிலும் சொதப்பிய அப்ரிடி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார்.