இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். முன்னதாக அவர் தனது ஓய்வு குறித்து பிசிசிஐ-யிடம் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. இதனால் அவரை தடுக்க பிசிசிஐ அனைத்து முயற்சிகளையும் எடுத்த போதிலும் விரட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ''டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக இதுவே சரியான நேரம். #269 signing off'' என்று தெரிவித்துள்ளார். விராட் கோலி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியதற்கு மிக முக்கியமான 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஓய்வுக்கான காரணத்தை விராட் கோலி குறிப்பிடவில்லை என்றாலும், இந்த அதிர்ச்சியூட்டும் முடிவுக்குப் பின்னால் சில காரணிகள் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
24
கோலி உடல் ரீதியான அழுத்தம்
விராட் கோலி ஓய்வுக்கான காரணங்களில் ஒன்று டெஸ்ட் வடிவத்தில் தேவைப்படும் உடல் தகுதியாக இருக்கலாம். ஆன்லைனில் பரவி வரும் ஒரு பழைய நேர்காணலில், விராட் ஏற்கனவே இந்த வடிவம் எவ்வளவு கடினமானது என்றும், தொடர்ந்து 5 நாட்கள் விளையாடுவது வீரரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். கோலி நல்ல பிட்னஸ் கொண்டவர். ஆனால் வயது ஏறிக் கொண்டே செல்வதால் உடல்நலம் கருதி ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
34
டெஸ்ட் போட்டிகளில் கோலியின் மோசமான பேட்டிங்
கடந்த ஐந்து ஆண்டுகளில், விராட் கோலி டி20, ஓடிஐ கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்ய சிரமப்பட்டு வருகிறார். அவரது பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் விராட் கோலி டெஸ்ட் சராசரி 50க்கும் கீழே சரிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கோலியின் பேட்டிங் தடுமாற்றம் தெளிவாக தெரிந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு பிசிசிஐ ரோகித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்தது. இருவரும் கண்டிப்பாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் வெளிநாட்டு தொடர்களில் குடும்பத்தினரை அழைத்து வரக்கூடாது என்றும் வீரர்களுக்கு உத்தரவிட்டது. பிசிசிஐயின் இந்த அழுத்தம் கோலியை மனதளவில் கடுமையாக பாதித்தது. பிசிசிஐ தன் மீது விமர்சனம் வைப்பதையோ, அழுத்தம் கொடுப்பதையோ விராட் கோலி விரும்பவில்லை. இதையறிந்தே ஓய்வு முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.