ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தனது முப்படைகளையும் தயார் செய்து Operation Sindoor என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை துள்ளியமாக தாக்கி அழித்தது.
இந்திய பாதுகாப்பு படை பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்குள் அத்துமீறி பொதுமக்கள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதனால் இரு நாடுகள் இடையே பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக IPL 2025 தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஐபிஎல் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.