சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் அணியின் லெஜண்ட் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் அணிக்காக 104 டெஸ்ட் மற்றும் 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 414 மற்றும் 502 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகச்சிறந்த பங்களிப்பு செய்தவர் வாசிம் அக்ரம்.
பாகிஸ்தான் அணிக்கு ஒரு ஃபாஸ்ட் பவுலராக மட்டுமல்லாது ஒரு கேப்டனாகவும் சிறந்த பங்களிப்பு செய்தவர். வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரும் கூட. 1984ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக ஆடிய வாசிம் அக்ரம், 2003ம் ஆண்டு வரை ஆடினார். 2003 ஒருநாள் உலக கோப்பையுடன் ஓய்வுபெற்றார் வாசிம் அக்ரம்.
மகளிர் டி20 உலக கோப்பையை 6வது முறையாக வென்று ஆஸ்திரேலியா சாதனை..!
வாசிம் அக்ரம் அதன்பின்னர் பயிற்சியாளர், வர்ணனையாளர் என கிரிக்கெட்டிலேயே தொடர்ந்து இயங்கிவரும் நிலையில், சுல்தான் என்ற பெயரில் தனது சுயசரிதை குறித்து பேசும்போது கூறியுள்ளார். அதில், தனது மனைவி ஹூமா அக்ரமின் சிகிச்சைக்காக லாகூரிலிருந்து சிங்கப்பூர் செல்லும்வழியில் விசா இல்லாமல் சென்னையில் இறங்கியபோது, சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் தன்னை நடத்திய விதம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். வாசிம் அக்ரமின் மனைவி சிகிச்சை பலனின்றி அவரது 42வது வயதில் சென்னையில் உயிரிழந்தார்.
IND vs AUS: எங்க மண்ணுல நாங்க தான்டா கெத்து..! நீங்க ஒயிட்வாஷ் ஆவது உறுதி.. ஆஸ்திரேலியாவை அலறவிடும் தாதா
தனது சுயசரிதை குறித்த உரையாடலில் அந்த சம்பவம் குறித்து பேசிய வாசிம் அக்ரம், என் மனைவியின் சிகிச்சைக்காக லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது, விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னையில் தரையிறங்கியது. எங்களிடம் இந்தியாவிற்கான விசா இல்லை. விசா இல்லாமல் சென்னையில் இறங்கிய எங்களை ஏர்போர்ட் அதிகாரிகளும் மக்களும் அடையாளம் கண்டுவிட்டார்கள். சென்னை ஏர்போர்ட்டில் இருந்த ஏர்போர்ட் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், கஸ்டம்ஸ் அதிகாரிகள் என அனைவருமே எனக்கு ஆறுதல் கூறி, என் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்து எனது விசா பிரச்னையையும் தீர்த்துவைத்தனர். அந்த சம்பவத்தை எந்த காலத்திலும் மறக்கமாட்டேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.