ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், லக்னோ, சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளை பெற்றிருப்பதால், இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது.
இவர்களில் திலக் வர்மா மற்றும் ஜித்தேஷ் ஷர்மா ஆகிய இருவரும் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார்கள் என்று இருவேறு தரப்பினர், இந்த 2 வீரர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றனர். இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா விரைவில் இந்திய அணியில் ஆடுவார் என்று பெரும்பாலானோர் கருத்து கூறிவருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவரும் ஜித்தேஷ் ஷர்மாவை வெகுவாக புகழ்ந்துள்ள சேவாக், அவர் இன்னும் ஓராண்டில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் ஆடி 167 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 239 ரன்கள் அடித்துள்ளார். பின்வரிசையில் இறங்குவதால் அவரால் பெரிய ஸ்கோர் செய்ய முடியவில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் கூட, 27 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.
IPL 2023: சுவாரஸ்யமான கட்டத்தில் IPL! நெருக்கடியில் RR.. GT உடன் பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
அந்த இன்னிங்ஸுக்கு பிறகு அவரது பேட்டிங் குறித்து பேசிய வீரேந்திர சேவாக், நான் இளம் வீரர்களுக்கு எப்போதுமே சொல்வது ஒரு விஷயம் தான். பந்தை பார்த்து ஆடுங்கள் என்பதுதான். பந்தை நன்றாக பார்த்து, அதன்பின்னர் அதை ஓங்கி அடிப்பதா அல்லது விடுவதா என்று முடிவு செய்து ஆட வேண்டும். அடிப்படையான டெக்னிக் அதுதான். அதை ஜித்தேஷ் ஷர்மா சிறப்பாக செய்கிறார். பந்தை நன்றாக கடைசிவரை பார்த்து ஆடுகிறார். டெக்னிக்கை மிக எளிமையாக வைத்துக்கொண்டு அருமையாக ஆடுகிறார். ஷாட் செலக்ஷனும் நன்றாக இருக்கிறது. இந்த சீசனில் நான் ஆவலுடன் பார்க்கும் வீரர் ஜித்தேஷ் ஷர்மா. இன்னும் ஓராண்டில் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடுவார் என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.