ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். ஜெயதேவ் உனத்கட் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், தற்போது கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.