ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சீசனின் மத்தியில் சில தோல்விகளை அடைந்தது. 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸை இன்று எதிர்கொள்கிறது.
மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளும் 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று, சிஎஸ்கேவை விட (10 போட்டிகளில் 5 வெற்றிகள்) நல்ல நிலையில் உள்ளன. ஆனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் சிஎஸ்கே அணி 3ம் இடத்தில் உள்ளது. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்று 6வது வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மேலேறினால் ராஜஸ்தான் வெளியேற நேரிடும்.
இப்படியான நெருக்கடியான சூழலில் இருக்கும் ராஜஸ்தான் அணி, இன்றைய போட்டியில் வலுவான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, ஜோஷுவா லிட்டில், முகமது ஷமி.