இதில், அவரது வலது காலின் முழங்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிக்ஸர் தடுக்கப்பட்ட போதிலும், பந்து பவுண்டரி லைனை தொடவே, பவுண்டரி கொடுக்கப்பட்டது. வலியால் துடித்த கேன் வில்லியம்சனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அவர் பேட்டிங் ஆட வரவேயில்லை. வீரர்கள் அமர்ந்திருக்கும் சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்தார்.