முதல் ஓடிஐயில் சூப்பர் சதம் விளாசி இருந்த விராட் கோலி இப்போது 2வது ஓடிஐயிலும் சதம் அடித்து பிரமிக்க வைத்துள்ளார். இது விராட் கோலியின் 84வது சர்வதேச சதமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார்.
டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி இப்போது இரண்டு (அல்லது அதற்கு மேற்பட்ட) தொடர்ச்சியான ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11 முறை சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆறு முறை இந்த சாதனையை செய்துள்ளார்.