ஆசிய கோப்பையில் 14 போட்டிகளில் ஆடி 766 ரன்களை குவித்து, ஆசிய கோப்பையில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான விராட் கோலி, 2018 ஆசிய கோப்பையில் ஆடவில்லை. அந்த தொடரில் ரோஹித் சர்மா தான் கேப்டனாக செயல்பட்டார். ரோஹித்தின் கேப்டன்சியில் அந்த ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது. வரும் ஆகஸ்ட் 27ம் தேதி ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.