200ஆவது போட்டியில் சாதிக்க காத்திருக்கும் விராட் கோலி!

First Published Mar 1, 2023, 10:57 AM IST

இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக விராட் கோலி 200 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளார்.
 

விராட் கோலி 200ஆவது போட்டி

சச்சின், எம் எஸ் தோனி வரிசையில் சிறந்து வீரராக இருப்பவர் விராட் கோலி. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இவர், 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். 

இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டி

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கச் செய்தார். விராட் கோலி 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Latest Videos


இந்தூர் டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றார். ஆனால், 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக் கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை என்று ஐசிசி தொடர்களில் ஒன்று கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை.

விராட் கோலி 77

அதுமட்டுமின்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டாக இருந்த விராட் கோலி தலைமையிலான அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் பெறவில்லை. ஆனால், ஐசிசி தொடர்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாவிட்டாலும், எதிரணிகளை அதனுடைய சொந்த மண்ணில் வெற்றி பெறுவதே பெரிய சாதனை என்று விராட் கோலி கூறியிருந்தார். 

இந்தியாவில் 200 சர்வதேச கிரிக்கெட் போட்டி

விராட் கோலி 106 டெஸ்ட், 271 ஒரு நாள் போட்டி மற்றும் 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த நிலையில் இந்தூரில் இன்று நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக இந்தியாவில் 200 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி களமிறங்கியுள்ளார்.

சச்சின், சேவாக், டிராவிட்

இந்தப் போட்டியில் விராட் கோலி 77 ரன்கள் எடுத்தால் உள்ளூரில் நடக்கும் போட்டியில் 4000 ரன்களை கடந்தவர்களின் பட்டியலில் இணைவார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (7216), ராகுல் டிராவிட் (5598), சுனில் கவாஸ்கர் (5067), விரேந்திர சேவாக் (4656) ஆகியோர் 4000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

click me!