முதல் பந்திலேயே ரோகித் சர்மா கேட்ச், அம்பயரும் அவுட் கொடுக்கல - ரெவியூ கேட்காமல் கோட்டை விட்ட ஆஸ்திரேலியா!

Published : Mar 01, 2023, 10:07 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா கேட்சானதைத் தொடர்ந்து அம்பயரும் அவுட் கொடுக்கல, ரெவியூ எடுக்காமல் ஆஸ்திரேலியா கோட்டை விட்டுள்ளது.  

PREV
16
முதல் பந்திலேயே ரோகித் சர்மா கேட்ச், அம்பயரும் அவுட் கொடுக்கல - ரெவியூ கேட்காமல் கோட்டை விட்ட ஆஸ்திரேலியா!
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

இந்தியா வந்த ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

26
இந்தியா - ஆஸ்திரேலியா

2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
 

36
இந்தியா

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில், முகமது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

46
ரோகித் சர்மா கேட்ச்

இதே போன்று ஆஸ்திரேலியா அணியில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த மிட்செல் ஸ்டார் மற்றும் கேமரூன் க்ரீன் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

56
ரோகித் சர்மா அவுட்

டாஸ் வென்ற இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிங்கினார். ரோகித் சர்மா முதல் பந்தை எதிர் கொண்டார். மிட்செல் ஸ்டார்க் பந்து வீசினார். பரபரப்பான முதல் பந்திலேயே ரோகித் சர்மா அடிக்க முயல, பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. இதையடுத்து அவுட் கேட்க, அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை. ரெவியூவும் கேட்கப்படவில்லை. ஆனால், பந்து பேட்டில் பட்ட சத்தம் நன்றாகவே கேட்டது.
 

66
மிட்செல் ஸ்டார்

கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் என்ன காரணமோ தெரியவில்லை ரெவியூ எடுக்கவில்லை. இதே போன்று 4ஆவது பந்தில் inside edge ஆக காலில் பட்டு விக்கெட் கீப்பர் கைக்கு சென்றது. அப்போது, ஆஸ்திரேலிய கேப்டன் எல்பிடபிள்யூக்கு ரெவியூ கேட்கவில்லை. அப்படி அவர் கேட்டிருந்தால் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் சென்றிருப்பார்.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories